எனக்கு கதை படிப்பது மிகவும் பிடிக்கும் சிறு வயதில் இருந்தே.. அப்போது எல்லாம் அம்புலி மாமா.. சிந்துபாத்.. தான் நான் பள்ளியின் வரலாறு புத்தகத்தை மிகவும் விரும்பி படிப்பேன்.. காலங்கள்
உ ருண்டோட நிறைய புதினங்கள் எனக்கு கிடைத்தது.. அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன். சிவகாமி சபதம். மேலும். ரமணி சந்திரன் அம்மா. முத்துலட்சுமி ராகவன் அம்மா புத்தகங்கள் என் வாழ்க்கையை பக்குவத்துடன் வாழ கற்றுக் கொடுத்தது.. ரமணி அம்மாவின் தீவிர ரசிகை நான்.... இப்போது பிரதிலிபியில கவிதைகள் எழுதி நானும் ஒரு எழுத்தாளர் என்பதில் பெருமை எனக்கு.. புதிதாக இப்போது கதையும் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.. வாழ்க என் தாய் தமிழ் மொழி... புதிய அவதாரத்தில் கதை ஆசிரியராக உங்கள் சுமதி தசரதன் சென்னை
தொடர்கதைகள் எழுதி கொண்டு இருக்கிறேன்.
.
1..ஒரு வானில் இரு நிலவோ (முடிந்தது)
2) தவிக்கிறேன் உன் நினைவில்
(முடிந்தது)
3.நீயின்றி நானேது.( ரன்னிங்)
4) வனத்தில் ஒரு வண்ணமயில்(ரன்னிங்)
5.) என் பார்வையின் பிழையன்றோ ( ரன்னிங்)
இதுபோக
133 அதிகாரங்களுக்கு 133 கவிதைகள்
தொடர் பதிவு (திருக்குறள்)
அடுத்து 950 க்கும் மேற்பட்ட கவிதைகள்
இவையெல்லாம் என் சொந்த படைப்புகள்.
மிகவும் கொடுமையான திருட்டு அடுத்தவரின் கற்பனையை திருடுவது.
உண்மையான கவிஞர்கள் அடுத்தவரின் கற்பனைகளை திருட மாட்டார்கள்..