pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

'கோல்டன் பேட்ஜ் விருதுகள்' போட்டி முடிவுகள்

16 ஆகஸ்ட் 2023

அன்புள்ள எழுத்தாளர்களுக்கு,

 

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘கோல்டன் பேட்ஜ் விருதுகள்’ போட்டியின் முடிவுகள் இதோ!

 

நாங்கள் இப்போட்டியை பிரதிலிபியில் எழுத தொடங்கி இருக்கும் புதிய எழுத்தாளர்களுக்காகவே பிரத்யேகமாக நடத்தினோம். புதிதாக தொடர்கதை எழுதுபவர்கள் அருமையான  ஒரு சிறு தொடர்கதையை எழுதுவதன் மூலம் பிரதிலிபியில் தங்களுடைய கோல்டன் பேட்ஜை அடைவதற்கு ஒரு படி முன்னேறுவதே இப்போட்டியின் நோக்கம். பிரதிலிபியில் கோல்டன் பேட்ஜ் பெறுவது ஏன் இவ்வளவு முக்கியமானது என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம்!  எளிமையாகச் சொல்வதென்றால், தங்களுடைய எழுத்துக்களிலிருந்து ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க விரும்பும் பிரதிலிபி எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் கோல்டன் பேட்ஜ் பெறுவது என்பது முதல் படியாகும். பிரதிலிபியில், 9 மொழிகளில், இப்போட்டியில் கலந்து கொண்டு கோல்டன் பேட்ஜ் பெற்ற 176 புதிய எழுத்தாளர்களுக்கு சிறப்பு வாழ்த்துகளை தெரிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.


இந்த எழுத்தாளர்கள் தற்போது தங்கள் படைப்பை லாக் செய்யக்கூடிய பலனை பெற்றுள்ளார்கள். அதாவது, ஒரு புதிய தொடரை பதிவிடும்போதெல்லாம், 16வது பாகத்திலிருந்து முழுத்தொடரும்  லாக் செய்யப்பட்டு, அந்தத் தொடர் பிரதிலிபி பிரீமியம் தொடராக மாறும் வசதி. வாசகர்கள் சந்தாக்களை வாங்குவதன் மூலமோ, நாணயங்களை செலுத்துவதன் மூலமோ அல்லது ஒவ்வொரு பாகமும் திறக்க அடுத்த நாள் வரை காத்திருப்பதன் மூலமோ கதைப் பாகங்களைத் திறக்க முடியும். பிரதிலிபி செயலியில் நீண்ட பல அத்தியாயத் தொடர்களை தொடர்ந்து பதிவிடுவதன் மூலமும், தொடரைப் பூட்டி வைப்பதன் மூலமும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிலிபி எழுத்தாளர்களின் சமூகத்தில் இணையும் வாய்ப்பை இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் பெற்றுள்ளார்கள்.

 

இதுமட்டுமல்ல, இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் தற்போது பிரதிலிபியின் 'சிறந்த எழுத்தாளர் விருதுகள் -6' போட்டியில் பங்கேற்கவும், ஆச்சரியமான பணப் பரிசுகள், பிரத்தியேக சட்டமிடப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பல விருதுகள் மற்றும் பலன்களைப் பெறவும் தகுதி பெறுவார்கள்.

 

'கோல்டன் பேட்ஜ் விருதுகள்' போட்டியில் பங்கேற்று தொடரை சமர்ப்பித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இப்போட்டிக்காக பல புதிய எழுத்தாளர்கள் தங்கள் முதல் முதல் தொடர்கதையை பிரதிலிபியில் பதிவிட்டிருந்தனர், வெற்றி மற்றும் வாசித்தவர்கள் எண்ணிக்கையை தாண்டி எழுத்தின் மீதான அவர்களின் ஆர்வத்தையும் அதற்கான முயற்சியையும் நாங்கள் மனமார பாராட்டுகிறோம். இத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் எழுத்து வாழ்க்கை  சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தில் லட்சக்கணக்கான வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் எழுத்தாளராக மாறுவதற்கான திறமை உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அத்திறமையை மெருகேற்றி  பிரதிலிபி செயலியில் தொடர்ந்து நீண்ட தொடர்களை எழுதினால்,  நீங்கள் ஒரு வெற்றிகரமான எழுத்து வாழ்க்கையை உருவாக்க நாங்கள் உதவுவோம் என்று உறுதியளிக்கிறோம்.

 

'கோல்டன் பேட்ஜ் விருதுகள்' போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் நம் இதயத்தைத் தொட்ட அற்புதமான கதைகளை வழங்கியதற்காக வாழ்த்துவோம்!

 

தலா  ரூ .1000/- பரிசு பெறும் முதல் 10 படைப்புகள்:

 

1. கண்மணி நீ வர காத்திருந்தேன் - மா னஸ்

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

2. பொட்டப்புள்ளை படிச்சது போதும் - G.MANIKANDAEASURAJA.

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

3. ஆஹா பொண்ணும் அதிரடி காவ(த)லனும் - யாத்ரா கிருஷ்ணன்

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

4. காற்றில் கலைந்த கனவுகள் - Kala Elumalai

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

5. முகிலே மூன்றாம் பிறையே - a"aara

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

6. இயற்கையின் மறுபக்கம் - அகமேந்தி

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

7. பிசி - 1 - தினேஷ்

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

8. என் காதல் மணவாளனே - ஆருத்ரா

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

9. இரத்தம் இல்லா மரணம் - Mari Mathi

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

10. வேந்தனின் ராகம் அவள் - தேவி சுமந்தர்

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 



பிற குறிப்பிடத்தக்க படைப்புகள்:

 

 

கதையின் பெயர்

எழுத்தாளர்

11

தேவின் அமிர்தா

Resri ரேஸ்ரீ

12

நாக வியூகம்

சுபஸ்ரீ பிரேமா

13

செந்தணலின் தாகம்....

Riyathi riya

14

பற பற பற பறவை ஒன்று

வெண்பனி s

15

மேக்னா 12 May 2023

Gowthami Karthikeyan

16

கலாப காதலி

Geetha Lakshmi

17

அவளுக்கு வயது 18

யோகா ஆராதனா

18

உன்னைத் தேடி - 1

சண்முகா சேதுராமச்சந்திரன்

19

அலைவன்

Anandachandrikai

20

கிளப் ஹவுஸ்

ச பரத்

21

கள்ளிச்செடியில் பூத்த ரோஜா

PALANI ROHITH

22

தாயுமானவளாய் வந்த தாரகை -1 (முழுத்தொகுப்பு)

தமிழ் அழகி

23

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா!

Priyakutty

24

கரிகாலன் (முழுத்தொகுப்பு)

புவனேஸ்வரி

25

வைகை கரை காத்தே நில்லு

அம்முலு

26

தாய்மையடையாத பெண்மை பெண்மையல்லவோ? 

ஸ்வாதி முருகன்

27

சந்தன தென்றல் -1

hamsa venkat

28

நீ என்பதே நான் தானடா(டி)

ராஜி

29

தேனுவின் தீரன் 

விஜி

30

ஹரியின் அழகனே

கலை ஶ்ரீ

 

வெற்றியாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

போட்டியில் வெற்றி பெற்ற 10 எழுத்தாளர்களும்  கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.

பெயர் (சான்றிதழில் இடம்பெற): 

உங்கள்  பிரதிலிபி ப்ரொபைல் லிங்க்:

மின்னஞ்சல் முகவரி:

தொலைபேசி எண்: 

வெற்றிபெற்ற படைப்பின் பெயர் மற்றும் போட்டி:

பரிசுத்தொகை:

பெயர் (வங்கிக்கணக்கு புத்தகத்தில் உள்ளபடி ஆங்கிலத்தில்):

வங்கிக்கணக்கு எண் :

IFSC எண் :

வங்கியின் பெயர்:

வங்கிக்கிளை:

PAN எண்:

வீட்டு முகவரி (அஞ்சல் குறியீட்டுடன்):

மேலே உள்ள விவரங்களை தெளிவாக [email protected]  எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 10 நாட்களில் அனுப்பிவைக்கவும் (நீங்கள் ஏற்கனவே எங்களிடம் உங்கள் விவரங்களை அனுப்பி இருந்தாலும் இப்போட்டியின் பரிசுத்தொகை பெற மீண்டும் மேல் உள்ள விவரங்களை அனுப்பவும்). நீங்கள் விரைவாக விவரங்களை வழங்கும்போது நாங்கள் பரிசுகளை  விரைவாக உங்களுக்கு அனுப்ப தோதாக இருக்கும். 

 

தற்போது நடைபெற்று வரும் ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6’ போட்டியில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு உங்களின் பிரபலமான மற்றும் சிறந்த கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை பதிவிட  வேண்டும். பிரத்யேக பரிசுகள் மற்றும் பங்கேற்பது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/lqj5bkgz7w



மனமார்ந்த வாழ்த்துக்களுடன் 

பிரதிலிபி போட்டிக்குழு