அன்புள்ள எழுத்தாளருக்கு,
இந்தியாவின் மிக பிரபலமான ஆன்லைன் இலக்கிய விருதான 'சிறந்த எழுத்தாளர் விருதுகள்' போட்டி மீண்டும் துவங்கி விட்டது! ஒரு அருமையான 60 பாக கதையை எழுதுவதன் மூலம் நீங்கள் பிரதிலிபியின் மதிப்பிற்குரிய சிறந்த எழுத்தாளர் ஆகும் வாய்ப்பை பெறுவதோடு, ஆச்சரியமூட்டும் பல பரிசுகள் மற்றும் கௌரவங்களையும் பெறலாம்.
உங்கள் பெஸ்ட்செல்லர் 60 பாகத் தொடரை எப்படி எளிதாகத் திட்டமிட்டு எழுதி முடிக்கலாம் என்பதற்கான 6 ரகசியக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஒரு வரி கதைக்கருவை எழுதுங்கள்: உங்கள் கதைக்கான 1 வரி கருவை ஒரு வெற்றுத்தாளில் எழுதுங்கள். இந்த கதைக்கருவை உங்கள் தினசரி வாழ்விலுருந்தோ/ செய்தித்தாள் கட்டுரை/ டிவி நிகழ்ச்சிகள்/ சமூக ஊடகங்களின் பதிவுகள்/ உங்கள் கதைகளின் விமர்சனங்களில் இருந்தோ அல்லது இப்படி உங்கள் மனதை தாக்கிய எங்கிருந்தும் எடுத்துக்கொள்ளலாம்.
2. உங்கள் கதையின் அரைப்பக்க கதைசுருக்கத்தை உருவாக்குங்கள்: மேலே எழுதிய 1 வரி கதைக்கருவினை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் கதையின் சுருக்கமான கட்டமைப்பை சிந்தியுங்கள். கதை எங்கிருந்து தொடங்குகிறது, எப்படி/எங்கு முடிகிறது என்று எழுதுங்கள். உங்கள் கதையில் உங்களுக்குத் தேவைப்படும் முக்கியமான கதாபாத்திரங்களைப் பற்றி சிந்தியுங்கள். அவர்களை பற்றி சுருக்கமான குறிப்புகளை எழுதுங்கள்.
3. கதையின் முக்கிய கதாபாத்திரங்களை வடிவமைக்கவும்: கதையின் முக்கிய கதாபாத்திரங்களை பற்றி சிந்தியுங்கள். அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் உள்ள சவால்கள் என்னென்ன? என்ன மாதிரியான ஆளுமை/குணம் கொண்டவர்கள்? உங்கள் கதையில் உங்களுக்கு தேவைப்படும் மற்ற கதாபாத்திரங்கள் யார்? சுமார் 4-5 வரிகளில் அவர்களை பற்றி சுருக்கமாக எழுதிக்கொள்ளுங்கள்.
4. கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான முக்கியமான நிகழ்வுகளை குறித்துக்கொள்ளவும்: ஒரு வெற்றுப்பக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எழுதிய கதைசுருக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு, கதையில் என்னென்ன மாதிரியான முக்கிய நிகழ்வுகள் நடைபெறலாம் என்று சிந்தித்து எழுதுங்கள்.
நிகழ்வுகளை ஆரம்பம் முதல் இறுதி வரை 1,2,3… என்று வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நிகழ்வு பற்றியும் ஒரு வரியில் சுருக்கமாக எழுதுங்கள்.
5. உங்கள் கதையை பாகங்களாக பிரித்துக்கொள்ளவும்: தற்போது போட்டிக்கான உங்கள் 60 பாகங்கள் கதையை திட்டமிடும் நேரம். கதையை மொத்தம் 6 பெரும் பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் கதையின் முக்கிய நிகழ்வுகளை பகிரவும்.
1-10 பாகங்கள்
11-20 பாகங்கள்
21-30 பாகங்கள்
31-40 பாகங்கள்
41-50 பாகங்கள்
51-60 பாகங்கள்
இந்த ஒவ்வொரு பிரிவிலும் கதையில் என்ன நடக்கும்? நீங்கள் என்ன எழுதுவீர்கள் என்று உங்கள் யோசனையை 1-2 வரிகளில் எழுதவும்.
6. ஒவ்வொரு பாகத்திற்கும் குறிப்பு எழுதுங்கள்: நாம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டோம்! நீங்கள் ஒவ்வொரு 10 பாக பிரிவுக்கும் யோசனையை எழுதிவிட்டீர்கள். இப்போது ஒவ்வொரு தனித்தனி பாகத்தையும் நாம் திட்டமிட வேண்டும்.
ஒவ்வொரு பாகத்திலும் என்ன நடக்கும் என்ற உங்கள் தோராயமான யோசனையை 1 வரியில் எழுதுங்கள். உதாரணமாக,
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
மற்றும் பல…
*******************************
இந்த முழுமையான திட்டமிடலுக்கு 2-3 நாட்கள் ஆகலாம். ஆனால், கதை எழுதுவதற்கு முன்னரான இந்தத் திட்டமிடல் உண்மையில் மிகவும் முக்கியமானது. பிரதிலிபி சிறந்த எழுத்தாளர் விருதுகள் போட்டிக்கான உங்கள் கதையை நீங்கள் பதிவிடத் தொடங்கும்போது, எந்தத் தடையும் இல்லாமல் ஒவ்வொரு கதைப் பாகத்தையும் சரளமாக எழுத இந்தத் திட்டமிடல் உங்களுக்கு பெரிதும் உதவும். நீங்கள் முன்னரே அனைத்தையும் திட்டமிட்டு விட்டதால் அடுத்து என்ன எழுதுவது என்ற யோசனைத் தடை உங்களுக்கு இருக்காது. இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள மற்றவர்களை விட நீங்கள் ஏற்கனவே முன்னிலையில் இருப்பீர்கள்.
பிரதிலிபி குழு பகிர்ந்துள்ள இந்த ரகசியக் குறிப்புகளை முயற்சிக்கவும்! முழுத் தொடர்கதை எழுதும் செயல்முறையும் உங்களுக்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள். டிசம்பர் 25க்கு முன்னரே 60 பாகங்கள் கொண்ட கதையை நீங்கள் எளிதாக எழுதி முடித்துவிடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6’ போட்டி பற்றிய முழு விவரங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்- https://tamil.pratilipi.com/event/lqj5bkgz7w
இன்றே எழுதத் தொடங்குங்கள்!
வாழ்த்துகளுடன்,
பிரதிலிபி போட்டிக்குழு.