பிரதிலிபி போட்டிகளுக்கான முடிவு எடுக்கும் செயல்முறை
1. தகுதியான படைப்புகளை தேர்வு செய்வது:
→ வெளியீட்டு தேதி – தொடர் போட்டி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலக்கெடுவிற்குள் பதிவிடப்பட்டிருக்க வேண்டும்.
→ குறைந்தபட்ச அத்தியாயங்கள் – போட்டி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச அத்தியாயங்கள்/பகுதிகள் தொடரில் இருக்க வேண்டும்.
→ சொற்களின் எண்ணிக்கை – ஒவ்வொரு அத்தியாயமும், போட்டி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச சொற்களின் எண்ணிக்கையை கொண்டிருக்க வேண்டும்.
→ உள்ளடக்கம் – பிரதிலிபியின் Explicit Content Policy-க்கு முரணான உள்ளடக்கம் இருந்தால் தொடர் தகுதி நீக்கம் செய்யப்படும். அதைப்பற்றிய விவரங்களை இங்கே பார்க்கவும்.
→ நகல் அல்லது அடுத்தவரின் படைப்புகள்/மறுபதிவு செய்யப்பட்ட படைப்புகள் நேரடியாக தகுதிநீக்கம் செய்யப்படும்.
2. மதிப்பீட்டு செயல்முறை:
போட்டிக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்கள், அந்தந்த மொழியில் நிபுணத்துவம் பெற்ற நடுவர்களால் மதிப்பிடப்படுகின்றன. அப்போது, கீழே உள்ள அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும்:
கதைசொல்லும் முறை– வாசகர்களை கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை சுவாரசியம் குறையாமல் ஈர்க்கும் விதம்.
புதுமை – சலிப்பான அல்லது பிரதிலிபியில் ஏற்கனவே உள்ளது போன்ற ஒரே மாதிரியான கதை களங்களைத் தவிர்த்து, புதிய மற்றும் தனித்துவமான சிந்தனைகள்.
வாசகர்களின் தாக்கம் – வாசகர்களுடனான ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்டுத்தி, வாசித்து முடித்த பிறகும் அதைப்பற்றியே சிந்திக்க வைப்பது. இதற்கான பிரதிபலிப்பை உங்கள் தொடரின் பின்னூட்டங்களிலேயே காணலாம்.
கதைத் திருப்பங்கள் – எதிர்பாராத திருப்பங்கள், கதையை இன்னும் சுவாரசியமாக்கி, வாசகர்களை தொடர்ந்து ஆர்வத்துடன் வைத்திருக்கும்.
கதையின் வேகம் – கதையை இழுத்தடிக்காமல், அவசரப்படுத்தாமல், வாசகர்களின் ஆர்வத்தை குறைக்காமல் சரியான ஓட்டத்துடன் நகர்த்துதல்.
சுவாரசியமான திருப்புமுனைகள் – திடீர் பரபரப்பை ஏற்படுத்தும், எதிர்பாராத நிகழ்வுகள், கதையின் சுவாரசியத்தை தக்கவைக்கும்.
கதாபாத்திரங்களின் உருவாக்கம் – கதாபாத்திரங்கள் நம்பகத்தன்மையோடும் உயிர்ப்போடும் இருந்தால், வாசகர்கள் அந்த கதாபாத்திரங்களுடன் ஒரு இறுக்கமான பிணைப்பை உணர்வார்கள்.
குறிப்பு: ஒவ்வொரு நடுவரும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்குவார்கள். பின் அந்த மதிப்பெண்களின் சராசரி மதிப்பிடப்பட்டு, இறுதி தரவரிசை தீர்மானிக்கப்படும்.
3. இருமுறை சரிபார்ப்பு
இவ்வாறு நடுவர்கள் மதிப்பிட்ட தொடரை, இரண்டு பேர் கொண்ட பிரதிலிபி மொழி குழு மீண்டும் பரிசோதித்து விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா, மதிப்பீடு நியாயமாக உள்ளதா என உறுதி செய்யும். அதன் பின்னரே இறுதி வெற்றியாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
4. முடிவுகள் அறிவித்தல்
போட்டி முடிவுகள் அதிகாரப்பூர்வ பிரதிலிபி பகுதியில் வெளியிடப்படும். மேலும், வெற்றியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மற்றும் பிரதிலிபியின் செய்திகள் மூலம் தகவல் அனுப்பப்படும்.
கதைகளை எழுதுவதும் அதை மதிப்பிடுவதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணர்வுகளைப் பொறுத்து மாறுபடும் என்பதை நாங்களும் புரிந்து வைத்துள்ளோம். ஒருவருக்கு பிடித்தது, இன்னொருவருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், எங்கள் மதிப்பீட்டு நடைமுறை, அனைவருக்கும் சமமாகவும், நியாயமாகவும், தெளிவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துக்களுடன்
பிரதிலிபி குழு.