pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சிறந்த எழுத்தாளர் விருதுகள் | சீசன் 9 | அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

09 മെയ്‌ 2024

சிறந்த எழுத்தாளர் விருதுகள் | சீசன் 9 | அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

 

1. இந்த போட்டியில் யார் பங்கேற்கலாம்?

→ சிறந்த எழுத்தாளர் விருதுகள் போட்டியில் இப்போது அனைத்து எழுத்தாளர்களும் பங்கேற்கலாம். உங்களிடம் கோல்டன் பேட்ஜ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்கேற்க முடியும்!

 

2. டிரைலர், முன்னுரை, குறிப்புகள் போன்றவற்றை ஒரு பாகமாக பதிப்பித்து கதையை தொடங்குவதை நான் ஏன் தவிர்க்க வேண்டும்?

→ டிரைலர், முன்னுரை, குறிப்புகள் போன்றவற்றை ஏன் தவிர்க்கவேண்டும் என்பதற்கான காரணங்கள்: 

(1) வாசகர் ஈடுபாடு: பாகம் 1-இலிருந்து கதை உடனடியாக தொடங்கவேண்டும் என்பதையே வாசகர்கள் விரும்புவார்கள். அதுதவிர பிற செய்திகளை கதையின் தொடக்கத்தில் கொடுத்தால் கதையை தொடர்ந்து வாசிக்கும் விருப்பம் குறைந்துவிடும். 

(2) அறிவுரை: தேவைப்பட்டால் 4-5 வரிகளுக்கு மிகாமல் அறிமுகம் அல்லது டிரைலர் ஆகியவற்றுடன் முதல் பாகத்தை தொடங்கலாம். அதன்பின் நேரடியாக முதல் காட்சியை தொடங்கிவிடவேண்டும்.

 

3. போட்டிக்கு தகுதிபெற என்னுடைய தொடரை பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனில் நான் எப்படி சேர்ப்பது?

→ ஒரு கோல்டன் பேட்ஜ் எழுத்தாளராக உங்களது புதிய தொடரின் முதல் 15 பாகங்கள் வாசகர்களுக்கு இலவசமாக வாசிக்க கிடைக்கும். நீங்கள் 16ஆவது பாகம் பதிப்பிக்கும், தானாகவே உங்களது தொடர் பிரதிலிபி பிரீமியத்தின்கீழ் வந்துவிடும். அப்போதிலிருந்து நீங்கள் வருமானம் பெறுவதற்கான வழி திறந்துவிடும். 

 

4. என்னிடம் இப்போது கோல்டன் பேட்ஜ் இல்லை. நான் என்ன செய்வது?

→ கோல்டன் பேட்ஜ் இல்லையெனினும் நீங்கள் போட்டியில் பங்கேற்க முடியும். இடையில் கோல்டன் பேட்ஜ் கிடைத்தாலும், புதிய பாகங்கள் பதிப்பிக்கும்போது உங்களது தொடர் தானாகவே பிரதிலிபி பிரீமியத்தின்கீழ் வந்துவிடும்.

→ மேலதிகமாக, கோல்டன் பேட்ஜ் கிடைத்தபின் 16+ பாகங்கள் உள்ள உங்கள் எந்த தொடரையும் ப்ரீமியத்தின் கீழ் மாற்றிக்கொள்ள முடியும்:

Step 1: பிரதிலிபி செயலியை திறந்து, ‘பேனா’ ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட தொடரை திறக்கவும்.

Step 2: பின் "தொடர் விவரங்களை திருத்த" பொத்தானை க்ளிக் செய்து, சப்ஸ்கிரிப்க்ஷனில் உங்கள் தொடரை சேர்க்கும் ஆப்ஷனை தேர்தெடுக்கவும். 

Step 3: சப்ஸ்கிரிப்ஷனில் சேர்க்கும் ஆப்ஷனிற்கு ‘ஆம்’ என தேர்ந்தெடுக்கவும். பின் 24 மணி நேரத்திற்குள் உங்களது தொடர் ப்ரீமியத்தில் சேர்ந்துவிடும். 

 

5. பிரதிலிபியில் நான் எப்படி கோல்டன் பேட்ஜ் பெறுவது?

→ நீங்கள் பிரதிலிபியில் கோல்டன் பேட்ஜ் எழுத்தாளராக கீழே கொடுத்திருக்கும் இரண்டும் பூர்த்தியாக வேண்டும். அவை பூர்த்தியானபின்பு, உங்களது ப்ரோபைலில்கோல்டன் பேட்ஜ் தெரியும் - 

1. உங்களுக்கு குறைந்தபட்சம் 200 ஃபாலோவர்ஸ் இருக்கவேண்டும். 

2. நீங்கள் கடைசி 30 நாட்களில் 5 படைப்பேனும் பதிப்பித்திருக்க வேண்டும்.

 

6. எனது தொடர் போட்டியில் சேர்ந்துவிட்டது என்பதை நான் எப்படி தெரிந்துகொள்வது?

→ கீழே உள்ள வழிமுறையை கொண்டு உங்களது தொடர் போட்டியில் சேர்ந்துவிட்டதா இல்லையா என்பதை உறுதி செய்துகொள்ளலாம்:

(1) உங்களது தொடரின் பாகங்கள் குறிப்பிட்ட காலவரையரைக்குள் பதிப்பிக்க வேண்டும்: போட்டியின் தொடக்கத்தேதி மற்றும் முடிவு தேதிக்குள் 70 பாகம் கொண்ட தொடர் பதிப்பிப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.. 

→ ஒவ்வொரு பாகமும் குறைந்தபட்சம் 1000 வார்த்தைகள் கொண்டிருக்கவேண்டும். (அதிகபட்ச வார்த்தை/பாக வரம்புகள் இல்லை)

 

(2) போட்டிக்கான பிரிவை தேர்ந்தெடுங்கள்: தொடரின் முதல் பாகம் பதிப்பிக்கும்போது ‘சிறந்த எழுத்தாளர் விருது 9’ எனும் பிரிவை தேர்ந்தெடுக்கவும். இது போட்டியில் உங்கள் பங்கேற்பை உறுதிசெய்யும்.

 

(3) போட்டி விதிகளை பின்பற்றுங்கள்: போட்டி விதிமுறைகளை பார்த்து உங்கள் தொடர் அதனை பின்பற்றி எழுதப்பட்டிருக்கிறதா என சரிபார்க்கவும்.


7. போட்டி முடிவுகளை அறிவிக்கும் முறைமை என்ன?

→ போட்டி கடைசித்தேதி முடிந்தபின், எங்களது குழு போட்டியின் காலவரையறைக்குள் எழுதப்பட்ட தொடர்களின் பட்டியலை எடுப்பார்கள். போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டு எழுதப்பட்ட தொடர்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

 

→ எங்களது நடுவர் குழு அனைத்து தொடர்களையும் வாசித்து, கதைக்களம், தொடக்கத்திலிருந்து முடிவு வரை கதையின் சுவாரசியம், கதாபாத்திர வடிவமைப்பு, வசன அமைப்பு, கதைதிருப்பங்கள் மற்றும் பலவற்றை கருத்தில் கொண்டு வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். 

 

8. 100 பாக சாம்பியன்களில் இருந்து எப்படி வாசகர் தேர்வாக முதல் 20 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்?

→ போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறைந்தபட்சம் 100 பாகங்கள் கொண்டு எழுதப்படும் அனைத்து தொடர்களும் இதற்கு தகுதி பெறும்.

 

→ வாசகர் எண்ணிக்கை, வாசகர் ஈடுபாடு மற்றும் படைப்பை வாசிக்க தொடங்கிய வாசகர்களில் எத்தனை பேர் படைப்பை வாசித்து முடிக்கிறார்கள் (Completion Rate metrics) ஆகியவற்றின் அடிப்படையில் வாசகர் தேர்வாக முதல் 20 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.

 

9. இந்த போட்டியில் எனது ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட தொடரின் இரண்டாவது சீசனை எழுதலாமா?

→ எழுதலாம். ஆனால் இரண்டாவது சீசன் தன்னளவில் முழுமையான கதைக்களத்தை கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்போதே வாசித்து முடிவுகளை அறிவிக்க ஏதுவாக இருக்கும். அப்படி இல்லாமல், உங்கள் கதை / கதையின் திருப்பங்கள் முதல் சீசனை ஒட்டி எழுதப்பட்டால் நடுவருக்கு அதனை மதிப்பிட சிரமமாக இருக்கும். அதன் காரணமாக நீங்கள் மதிப்பெண்களை இழக்கலாம்!

 

10. என்னுடைய ஒரே தொடரை இரண்டு வேறு போட்டிகளுக்கு சமர்ப்பிக்கலாமா?

→ இல்லை. ஒரு தொடர் ஒரு போட்டிக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். 

 

11. போட்டி முடிவுகளை எங்கே பார்ப்பது?

→ ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் வலைப்பதிவு பகுதியில் இந்த போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.

Step 1: பிரதிலிபி செயலியை திறந்து, பேனா ஐகானை கிளிக் செய்யவும்.

Step 2: பின் கடைசிவரை ஸ்க்ரால் செய்யவும். அங்கே வலைப்பதிவுகள் பகுதியை கிளிக் செய்யவும். அதில் போட்டி முடிவுகளை பார்க்க இயலும்.

 

--------------------------------------------------------------------------------------------------

சூப்பர் எழுத்தாளராக மாறுவதற்கு உதவி வேண்டுமா?

 

=> தொடர்கதை எப்படி பதிப்பிப்பது என்பதை இந்த வீடியோ வழிகாட்டி மூலம் தெரிந்து கொள்ள. [இங்கே சொடுக்கவும்]

=> டிரெண்டிங் தீம் மற்றும் எழுதுவதற்கான குறிப்புகளை வாசித்து பயன்பெறுங்கள்! [இங்கே சொடுக்கவும்]

  


 

இந்தப் போட்டி தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் நேரடியாக எங்களுக்கு எழுதலாம். எங்கள் குழு ஒவ்வொரு கேள்விக்கும் 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க முயற்சிக்கும். 

ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் ஏற்கனவே நம் தளத்தில் வெற்றியைக் கண்டுள்ளனர், தங்கள் திறமையை வசீகரிக்கும் கதைகளாக மாற்றி, ராயல்டிகளைப் பெற்றுள்ளனர். அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு இதோ! இதில் பங்குபெற்று, சம்பாதிக்கும் எழுத்தாளராகவேண்டும் என்ற உங்கள் கனவுகளுக்கு சிறகு கொடுங்கள்!

அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்!

பிரதிலிபி போட்டிகள் குழு