pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

‘காதல் காலம்’ போட்டி முடிவுகள்

14 அக்டோபர் 2023

அன்புள்ள எழுத்தாளர்களுக்கு,

 

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘காதல் காலம்’ போட்டியின் முடிவுகள் இதோ!

 

நாங்கள் இப்போட்டியை பிரதிலிபியில் எழுத தொடங்கி இருக்கும் புதிய எழுத்தாளர்களுக்காகவே பிரத்யேகமாக நடத்தினோம். புதிதாக தொடர்கதை எழுதுபவர்கள் அருமையான  ஒரு சிறு தொடர்கதையை எழுதுவதன் மூலம் பிரதிலிபியில் தங்களுடைய கோல்டன் பேட்ஜை அடைவதற்கு ஒரு படியை நெருங்குவதே இப்போட்டியின் நோக்கம். 

 

பிரதிலிபியில் கோல்டன் பேட்ஜ் பெறுவது ஏன் இவ்வளவு முக்கியமானது என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம்!  எளிமையாகச் சொல்வதென்றால், தங்களுடைய எழுத்துக்களிலிருந்து ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க விரும்பும் பிரதிலிபி எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் கோல்டன் பேட்ஜ் பெறுவது என்பது முதல் படியாகும். பிரதிலிபியில் 9 மொழிகளில் இப்போட்டியில் கலந்து கொண்டு கோல்டன் பேட்ஜ் பெற்ற 200க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களுக்கு சிறப்பு வாழ்த்துகளை தெரிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

 

இந்த எழுத்தாளர்கள் தற்போது தங்கள் படைப்பை லாக் செய்யக்கூடிய பலனை பெற்றுள்ளார்கள்.  அதாவது, ஒரு புதிய தொடரை பதிவிடும்போதெல்லாம், 16வது பாகத்திலிருந்து முழுத்தொடரும்  லாக் செய்யப்பட்டு, அந்தத் தொடர் பிரதிலிபி பிரீமியம் தொடராக மாறும் வசதி. வாசகர்கள் சந்தாக்களை வாங்குவதன் மூலமோ, நாணயங்களை செலுத்துவதன் மூலமோ அல்லது ஒவ்வொரு பாகமும் திறக்க அடுத்த நாள் வரை காத்திருப்பதன் மூலமோ கதைப் பாகங்களைத் திறக்க முடியும். பிரதிலிபி செயலியில் நீண்ட பல அத்தியாயத் தொடர்களை தொடர்ந்து பதிவிடுவதன் மூலமும், தொடரைப் பூட்டி வைப்பதன் மூலமும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிலிபி எழுத்தாளர்களின் சமூகத்தில் இணையும் வாய்ப்பை இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் பெற்றுள்ளார்கள்.

 

இதுமட்டுமல்ல, இந்த புதிய கோல்டன் பேட்ஜ் எழுத்தாளர்கள் தற்போது பிரதிலிபியின் ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் -6’ போட்டியில் பங்கேற்கவும், ஆச்சரியமான பணப் பரிசுகள், பிரத்தியேக சட்டமிடப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பல விருதுகள் மற்றும் பலன்களைப் பெறவும் தகுதி பெறுவார்கள்.

 

'காதல் காலம்' போட்டியில் பங்கேற்று தொடரை சமர்ப்பித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். முதல்முறையாக கதை எழுதும் நிறைய எழுத்தாளர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று கதைகளை  சமர்பித்திருந்தனர். வெற்றி தோல்வியை தாண்டி அவர்களின் எழுதுவதற்கான ஆர்வத்தையும் குறிப்பிட்ட காலத்தில் கதையை நிறைவு செய்ததையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். உங்கள் அனைவருக்கும் சிறப்பான எழுத்து வாழ்க்கை காத்திருக்கிறது, பிரதிலிபியில் தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான எழுத்து வாழ்க்கையை உருவாக்க நாங்கள் உதவுவோம் என்று உறுதியளிக்கிறோம்.

 

இப்போட்டி சிறுகதைகளின் தொகுப்பு, எனவே நிறைய எழுத்தாளர்கள் போட்டியின் தலைப்பையே முதன்மை தலைப்பாக கொடுத்துள்ளனர்.  அதனால் வெற்றிபட்டியலில்  'காதல் காலம்' என்ற பெயரோடு அக்கதையின் எழுத்தாளரின் பெயரையும் பார்க்கவும்.

 

'காதல் காலம்' போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் அற்புதமான கதைகளை வழங்கியதற்காக வாழ்த்துவோம்.

 

தலா  ரூ .1000/- பரிசு பெறும் முதல் 7 படைப்புகள்:

 

1. காதல் காலம் - PALANI ROHITH 

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

2.உனக்காகவே நான் வாழ்கிறேன் - varsha s

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

3. காதல் காலம் கதைகள் - சசி கலா

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்)

 

4. பாவாடை அவிழும் வயதில் - இளைய நிலா

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

5. காதல் காலம் - Wordsmith

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

6. என்னை மாற்றும் காதலே - விஜி

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

7. காதல் காலம் (சிறுகதைகள்) - பிறை நிலா

(ரூ .1000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

பிற குறிப்பிடத்தக்க படைப்புகள்:



 

கதை

எழுத்தாளர்

1

பாலினக் காதல்

யாத்ரா கிருஷ்ணன்

2

காதல் மழையே

பொ. அனிதா பாலகிருஷ்ணன்

3

காதலின் ஏழு நிலைகள்

விஜயம்.கிமூ

4

காதல் காலம்

Priya Krishnan

5

சட்டென்று மாறுது வானிலை

Priyadarshini R

6

காதல் காலம்

ப்ரியா விமல்

7

சிற்பிகாவிற்காக முதல்வன்

யாவிகா கணகவி

8

காதல் காலம்

கதை ரசிகை

9

காதலா....கண்ணாளா.....

Sakeena Azeez

10

காதல் காலம்

சுடர் பிரியா

11

புடிச்சு இருக்கு

Rahumath Nisha

12

காதல் காலம்

இருள் தேவதை

13

உன் காதலால் பைத்தியம் ஆனேன்

Kani suresh

14

காதல் காலம்

பிரியா

15

இரகசிய காதல்

உஷா கிருஷ்ணன்

 


வெற்றியாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

வெற்றியாளர்கள் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் பெறுவதற்கு தங்கள் மின்னஞ்சலில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை விரைவில் [email protected] இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

 

நீங்கள் அனைவரும் விரைவில் கோல்டன் பேட்ஜ் பெற்று, தற்போது நடைபெற்று வரும் ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6’ போட்டியில் கலந்து கொண்டு உங்களின் பிரபலமான மற்றும் சிறந்த கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை பதிவிட  வேண்டும். பிரத்யேக பரிசுகள் மற்றும் பங்கேற்பது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/lqj5bkgz7w

 

மனமார்ந்த வாழ்த்துக்களுடன், 

பிரதிலிபி போட்டிக்குழு.