pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

100 பாகங்கள் எனும் மைல்கல்லைத் தொட்ட அனைத்து சிறந்த எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!

18 அக்டோபர் 2023

அன்புள்ள எழுத்தாளர்களுக்கு,

உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு சிறப்பான செய்தி எங்களிடம் உள்ளது!

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 5’ இன் போட்டி முடிவுகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அப்போட்டி குறித்து தெரியாதவர்களுக்கு, ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள்’ ஓர் தேசிய அளவிலான போட்டியாகும், பங்கேற்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் நாங்கள் கடுமையான சவாலை வழங்கினோம்.  100 அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்கள் கொண்ட தொடரை எழுதும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிரதிலிபியிலிருந்து உத்தரவாதமான பரிசுகளை அறிவித்திருந்தோம்.

 

பொதுவாக, தொடர்கதைகள் எழுதுவது என்பதே ஒரு சவால் தான். அதிலும், ஒருவர் 100 பாகங்கள் கொண்ட தொடரை எழுதுவதற்கு கணிசமான நேரம், பொறுமை, திறமை, ஒழுக்கம் மற்றும் எழுத்து  திறமை தேவை என்பதால் இது மிகவும் கடினமான சவாலாகவே இருந்தது. எழுத்தின் மீது மிகுந்த அன்பு இல்லாமல், இதைச் செய்வது எளிதல்ல.

 

வெளிப்படையாகச் சொன்னால், எழுத்தளார்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். இந்த எழுத்துப் போட்டியில் பல எழுத்தாளர்கள் சவாலை ஏற்று 100 பாகத் தொடர்களை பதிவிட்டிருந்தனர்! அவர்களில் சிலர், 9 மொழிகளில், 120/ 150/200/250 அல்லது அதற்கும் அதிகமான பாகங்களுடன் கதைகளை எழுதி இருந்தனர். எங்களின் வியப்பை வெளிப்படுத்தவோ, எழுத்தாளர்களைப்  பாராட்டவோ எங்களிடம் வார்த்தைகள் இல்லை.

 

எங்கள் தளத்தில் இத்தகைய திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இத்தகைய அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடின உழைப்பால் நாங்கள் எழுத்தாளர்களுக்கு இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, பெரிதாகச் செய்ய முடியும் என்று நம்புகிறோம்.

 

உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் எழுத்தார்வம் எங்களை ஊக்கப்படுத்தியது மற்றும்  இது மற்ற எழுத்தாளர்களையும் எழுதுவதற்கு ஊக்குவிக்கும். எனவே, உங்களின் இந்த சிறப்பான சாதனையை பிரதிலிபி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாடுவோம்!

 

நாங்கள் உறுதியளித்தபடி, உங்கள் அனைவருக்கும் கூரியர் மூலம் ஒரு சிறப்பு சான்றிதழ் பரிசாக அனுப்புவோம். சில நாட்கள் காத்திருக்கவும், இது தொடர்பாக எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.

 

இந்தப் போட்டியில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட மிக நீளமான தொடர்-

 

 

இப்போட்டியில் தமிழ் மொழியில் 100 மற்றும் அதற்கும் மேற்பட்ட பாகங்களைக் கொண்ட தொடரை பதிவிட்ட  அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல்-

 

 

எழுத்தாளர்

படைப்பு

1

உறவுப் பாலங்கள்

murugesan Nallathambi

2

உழந்தும் உழவே தலை...1

நாக நந்தினி

3

உயிர் உறை 1

Priya Dharshini . S

4

♥️உண்மை சொன்னால் நேசிப்பாயா♥️

Anitha Kumar

5

சர்க்கார்

Vanmathy hari

6

உயிர் தேடும் உன் மடி!! (முழுத் தொகுப்பு )

Aashmi S

7

நிலைக்கு வருமா அலங்காரத் தேர்

ஜெ.சுமதி ராஜேந்திரன்

8

காஞ்சியின் கனவு ( மாமல்லரின் சரிதம் )

பத்மினி கணேசன்

9

அனல் மேலே பனித்துளி

Lakshmi Rajendran

10

காதலன் குழந்தைதான் காதலி.

Kousalya Venkatesan

11

உறவாக நான் வரவா என் உயிரே 💞💞

Love Amore

12

என்னுயிர் மீனம்மா (நிறைவடைந்தது )

Rekha Sathish

13

யாழினை மீட்டிடும் காலன்

ஆரா

14

பிலஹரி நீயடி

Latha Sivanesan'

15

♥️ அந்தி நிலவே ♥️

சங்கரேஸ்வரி

16

தூமகேது

புவனா சந்திரசேகரன்

17

ஆதவனின் தென்றலவள்

Kanchana Senthil

18

ரணமும் காதலானதே

தனிமை காதலி

19

சோழ நாட்டு இளவரசியவள்

Tamil Selvi

20

சிந்து நதி பூ

Raja Lakshmi

21

மாலை டும் டும்... மஞ்சள் டும் டும்...

கவிதா ராமதாஸ்

22

பாவை தேடிய ஜீவன்

ஆர்த்தி வசந்தன்

23

உன் பார்வை தூண்டிலா.? (முடிவுற்றது)

நந்தினி சுகுமாரன்.

24

அஸ்வின் என்கிற அர்த்தநாரீஸ்வரன்..!

காரை ஆடலரசன்



எங்கள் பார்வையில், நீங்கள் அனைவரும் மிக சிறந்த எழுத்தாளர்கள்!

 

தொடர்ந்து இதே அளவு ஆர்வத்துடன் எழுதுங்கள். உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்!

 

தற்போது நடைபெற்று வரும் ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6’ போட்டியில் வாசகர் தேர்வு, திறமையான வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது என பல வடிவங்களில் முடிவுகள் வெளிவிடப்படும். நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு உங்களின் பிரபலமான மற்றும் சிறந்த கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை டிசம்பர் 25, 2023க்குள் வெளியிட வேண்டும். பிரத்யேக பரிசுகள் மற்றும் பங்கேற்பது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/lqj5bkgz7w

 

வாழ்த்துகளுடன்,

பிரதிலிபி போட்டிக்குழு.