pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

குடும்ப கதைகள் | Family Stories in Tamil

மதிய வேளையிலும் அந்த அறையை இருள் ஆட்சி செய்திருந்தது. சூரியனின் பொற்கதிர்கள் உட்புகாதபடி ஜன்னல்கள் இறுக மூடி திரை போட்டு மறைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் இருந்தவளுக்கு வெளிச்சத்துடன் அப்படி என்ன கோபமோ? இல்லை அவளுக்கு கோபம் தன்மீதே… தன் இயலாமை மீதே… தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒரு முடிவை எடுக்க முடியாத தன் மனதின் மீதே கோபம். அந்த ஆற்றாமையைத் தீர்க்கவே கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் இறுக மூடி அடைந்து கிடக்கின்றாள். கண்கள் தன்னை மீறி கண்ணீரை சொரிந்த படி இருக்க அடிக்கடி அதனைப் ...
4.7 (1K)
1L+ படித்தவர்கள்