pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சிறுவர் கதைகள் | Stories For Children in Tamil

இந்த சிறுவர் கதைகள் (Stories for children in tamil) பக்கம், உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளை கருத்தில் கொண்டு பிரதிலிபியால் உருவாக்கப்பட்ட பிரத்யேகமான பகுதியாகும்.

"ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.." என்று கேட்டு வளர்ந்த பால்யம் நம்முடையது. அப்படி நம்முடைய ஞாபக அடுக்குகளில் படிந்து போன நினைவுகளை இந்த சிறுவர் கதைகள் (Stories for children im tamil) மீட்டெடுக்கும்.

இன்றைய பெற்றோர்களின் மிகப்பெரிய கவலை, தங்கள் குழந்தைகள் மொபைல் போனிலும், வீடியோ கேமிலும் மூழ்கி இருப்பது தான். முன்பு போல குழந்தைகள் வெளியில் சென்று விளையாடும் சூழ்நிலைகள் அருகி வருவதால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் குழந்தைகளுக்கு மொபைல் போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இந்தச் சூழலில் அதையே ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வகையில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நீங்கள் கருதினால் இந்த தமிழ் சிறுவர் கதைகள் (stories for childrens in tamil) பகுதியை நீங்கள் தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம்.

நமக்கு அப்படியான கதைகளை சொல்வதற்கு வீட்டில் தாத்தா, பாட்டிகள் இருந்தனர். அதற்கெல்லாம் வாய்ப்புகள் குறைவாக உள்ள இன்றைய சூழலில் இந்த சிறுவர் கதைகள் (stories for childrens in tamil) பகுதி சிறு வயதிலேயே அவர்களுக்கு வாசிப்பின் மகத்துவத்தை அறிமுகப்படுத்தும்.

இவ்வாறு, சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது அவர்களுக்குபல்வேறு விதங்களில் நன்மை பயக்கும். அவர்களுடைய ஞாபக சத்தியை அதிகரிக்கும் , தனித் திறனை வளர்த்தெடுக்கும், கற்பனை வளத்தை கூட்டும் மற்றும் கவனத்தை ஒருமுகப்படுத்தும்.

சிறுவர்களுக்கு புரியும் வகையில் எளிமையான மொழி நடையில் எழுதப்படும், இந்த சிறார் கதைகளை (Stories for childrens in tamil) குழந்தைகள் மட்டும் தான் படிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. பெற்றோர்கள் படித்துவிட்டு, இரவு நேரங்களில் தங்களுடைய குழந்தைகளுக்குக் கதையாகச் சொல்லலாம். இதன் மூலம் பெற்றோருக்கும் குழந்தைக்கு இடையேயான இணக்கம் மேம்படும். மேலும், இந்தக் கதைகளைப் படிக்கும் நாமும் எவ்வித பயணச் செலவுமின்றி நம்முடைய சிறுவயது நினைவுகளுக்குச் சென்று, சற்று நேரம் குழந்தையாக மாறி விட்டுவரலாம்.

சிறுவர்களுக்கு வெறுமனே பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல் அறிவியல் கதைகள், அம்மாச்சி கதைகள், சிறுவர் பாடல்கள், பிரபல சிறார் எழுத்தாளர்களின் கதைகள் என்று அவர்களின் அறிவையும், ஆற்றலையும் வளர்த்தெடுக்கும் வகையில் இந்தச் சிறார் கதைகள் பகுதியில், பல்வேறு சிறப்பான படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

பாடத்தைத் தாண்டிய இது போன்ற நன்னெறி கதைகளை படிப்பது, குழந்தைகளை ஒழுக்கமாகும் நற்குணங்களோடும் வளர்த்தெடுக்க உதவி புரியும். நம்முடைய சிறுவயதில்கிடைத்த அனுபவங்கள், நம்முடைய பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லையே என்று இனிமேல்யாரும் வருந்தத் தேவை இல்லை. பிரதிலிபியின் இந்த 'சிறுவர் கதைகள் ' உங்களுக்கு அதற்கான தீர்வை நல்கும்.

ஒருமுறை உங்கள் பிள்ளைகளுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்தி வையுங்கள். அதன்பிறகு அவர்களே தொடர்ந்து ரசித்து வாசிப்பதை நீங்கள் நேரடியாக கண்டுணரலாம். டீவி, வீடியோ கேம் என்று நேரத்தை திண்ணும் விசயங்களிலிருந்து வெளிவந்து, அவர்களாகவே புதிய புதிய கதைகளை தேடி வாசிப்பார்கள். இதுபோன்ற சிறுவர் கதைகள் அவர்களின் சிந்தனா சக்தியைத் தூண்டி, எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து, முடிவைக் கண்டுபிடிக்கும் திறனை வளர்த்தெடுக்கும்.

எல்லா வயதினரும் வாசித்து மகிழக் கூடிய, இந்த தமிழ் சிறுவர் கதைகள் (stories for childrens in tamil), உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் ஒரு உற்றத் தோழனாக விளங்கும்.

மேலும்
ஆதவனின் கருனை பார்வையும், கதிர்களையும் மக்களிடத்தில் சேர்த்து விடியலைத் தொடங்கிவைத்தார். நெஞ்சுகுள்ள குடி இருக்கும் ஹா.. ஹா.. வெறித்தனம்.. இன்னா இப்போ லோக்கலு நா நம்ம கெத்தா ஒலாத்தனும் நெஞ்சுக்குள்ள குடி இருகும் நம்ம சனம் வெறித்தனம் இன்னா இப்போ லோக்கலு நா நம்ம கெத்தா ஒலாத்தனும் ஆமா அழுக்காருப்போம் வெறித்தனம் வெறித்தனம்.. கருப்பா கலையாருப்போம் வெறித்தனம் வெறித்தனம்.. ஒண்ணா உசுராருப்போம் வெறித்தனம் வெறித்தனம்.. புள்ளிங்கோ இருக்காங்க வேற இன்னாவோணும் ராவடி ராசாவா நிப்பேண்டா என்னோட கில்லா மேல ...
4.9 (11K)
3L+ படித்தவர்கள்