pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

வரலாற்று கதைகள் | History Stories in Tamil

தமிழ் வரலாற்று கதைகள் (history stories in tamil) என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையையும், வீழ்ச்சியையும் மட்டும் குறிப்பதல்ல. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த நம் நாட்டை, தமிழ் சமூகத்தை, அதன் பரந்த நிலப்பரப்பை அதில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை நம் கண் முன்னே காட்சிப்படுத்தும் ஆவணம் என்றே இந்த வரலாற்றுக் கதைகளைக் (history stories in tamil)

கூறலாம்.

காலம் காலமாக, இப்படியான நம் முன்னோர்களின் வரலாறுகள் பல்வேறு கலை வடிவங்களில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இதன் நவீனவடிவமாக, மொபைல் போன், கம்ப்யூட்டர் என்று இணைய வசதிகள் பெருகிவிட்ட இந்த காலத்திலும்.. வாசகர்களுக்கு வரலாற்றின் மீதாக இருக்கும் ஈர்ப்பு குறைந்து விடலாகாது என்பதற்காகவே நமது பிரதிலிபி வரலாறு சார்ந்த கருத்துகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த வரலாற்று கதைகள் (history stories in tamil) பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

அதிலும் வரலாற்றில் நடந்த உண்மை நிகழ்வு ஒன்று எடுத்துக் கொண்டு, எழுத்தாளருடைய கற்பனையையும் கலந்து எழுதப்படும் சரித்திரப் புதினங்கள் படிக்கப் படிக்க நம்முள் பலபடிமங்களை உருவாக்க வல்லவை. இவ்வாறு, ஒரு வரலாற்று நூல் என்பது பல்வேறு உள்அடுக்குகளை தன்னகத்தே கொண்டது. அவ்வளவு ஏன் பழங்கால கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட ஒரே ஒரு வரியை எடுத்துக் கொண்டு, ஆயிரம் பக்கங்களுக்கு மேல்புனையப்பட்ட வரலாற்று கதைகள் (history stories in tamil) தமிழில் ஏராளம் உண்டு. கல்கியும், சாண்டில்யனும், நா.பார்த்தசாரதியும் இதில் கைதேர்ந்தவர்கள்.

அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று, நம்முடைய பிரதிலிபி எழுத்தாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு படைத்த வரலாற்றுக் கதைகள் (history stories in tamil), உங்கள் கண்ணுக்கும், ரசனைக்கும் விருந்து படைக்க காத்திருக்கின்றன.

வழக்கமான மொழி நடையில் இருந்து மாறுபட்டு எழுதப்படும் இந்த தமிழ் வரலாற்று கதைகள், வாசகர்களாகிய உங்களுக்கு மிகவும் இனிமையானதொரு அனுபவத்தை வழங்கும். கலைநயமிக்க வார்த்தைகளால், காதல் ரசம் சொட்ட எழுதப்படும் இந்தக் கதைகள் வாசிப்பவர் மனதை கொள்ளை கொள்ளும்.

தமிழ் மன்னர்களின் வீரமும், கொடையும், போர் உத்திகளும் இன்னபிற சிறப்புகளும் இந்த உலகறிந்தது. அதை தமிழ் மக்களாகிய நாம் அறிந்து கொள்ள வேண்டியது நம்முடைய முக்கியமானக் கடமையாகும். அதனை கதை, கட்டுரை, நாவல் என்று பல்வேறு சுவாரசியமான வடிவங்களில் இந்தப் பக்கம் உங்களுக்கு வழங்குகிறது.

மேலும், கொடூர மன்னர்கள், கொடுங்கோல் ஆட்சியாளர்கள் என்று உலக வரைபடத்தில் ரத்த சரித்திரங்களைப் பரவ விட்ட ஹிட்லர் போன்ற வினோதமான மனிதர்களைப் பற்றிய வரலாறுகளையும் கதைகளாக நீங்கள் இங்கு வாசித்து அறிந்து கொள்ளலாம். சிறுகதைகள், நெடுங்கதைகள், கட்டுரை, நாடகம் என்று வரலாற்று புதினங்கள் ஒவ்வொன்றும் நம்முன்னோர்கள் வாழ்ந்த வீர சரித்திரத்தின் மிச்சங்கள்.

இருந்த இடத்திலிருந்தே பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால், உங்களை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் இந்த வரலாற்று கதைகள் (history stories in tamil) எனும் டைம்மிஷினில் நீங்களும் ஒரு முறை ஏறிதான் பாருங்களேன்.

மேலும்