pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

தமிழ் நாவல்கள் | Novels in Tamil

ஒரு நிகழ்வை, காட்சியை நாமே உடனிருந்து பார்ப்பது போன்ற அனுபவத்தை வாசிப்பாளருக்கு கடத்துவது நாவல்களின் தனிச் சிறப்பாகும். காதல், குடும்பம், சென்டிமென்ட், எதார்த்தம், திரில்லர் என்று பரந்துபட்ட உலகத்தை ஒரே கதையில் நாம் பெறவேண்டுமென்றால், அதற்கு தமிழ் நாவல்கள் (novels in tamil) பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.

வாசிப்பு உலகில் தமிழ் நாவல்களுக்கு (novels in tamil) என்று எப்போதும் ஒரு தனி இடம்உண்டு. 1876 ல் வெளிவந்த 'பிரதாப முதலியார் சரித்திரம்' தான் தமிழின் முதல் நாவல் ஆகும். அதைத் தொடர்ந்து இன்றைக்கு வரையிலும் கோடிக்கணக்கான தமிழ் நாவல்கள் (novels in tamil) பல்வேறு புகழ்பெற்ற எழுத்தாளர்களால், தொடர்ந்து எழுதி வெளியிடப்பட்டு வருகிறது. அவை வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெறுகின்றன.

அந்த வரிசையில் நமது பிரதிலிபியில், திறன்மிகு எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் எண்ணற்ற தமிழ் நாவல்கள் (novels in tamil), தொடர்ந்து சிறப்பான முறையில் வெளியிடப்பட்டு வருகிறது. பல்வேறு முன்னணி தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களை நீங்கள் எங்கும் தேடி அலைய வேண்டிய அவசியமின்றி, இந்த பக்கத்தில் ஒரே இடத்தில் காணலாம். மேலும், உங்களுக்கு விருப்பமான நாவலை ஒரே கிளிக்கில் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம்.

அதுமட்டுமின்றி, புதிய எழுத்தாளர்கள் பலரும் பிரதிலிபி வழங்கும் வாய்ப்பை பயன்படுத்தி, தங்களின் சிறப்பான கற்பனைத் திறன் மூலம் அற்புதமான படைப்புகளை தொடர்ந்து அளித்து வருகின்றனர். இந்த நாவல்கள் வித்தியாசமான கதைத் களங்களுடன் மிகவும் உயிரோட்டமாகவும், வாசிப்பவர்களை தன்னுடனே பயணிக்க வைக்கும் தன்மையுடனும் திகழ்கின்றன.

அன்பு, பாசம், நட்பு, துரோகம், கோபம், போட்டி, பொறாமை என்று மனித உணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டும் இந்த தமிழ் நாவல்கள் (novels in tamil) வாசிப்பவர்களுக்கு புதியதொரு திறப்பாக இருக்கும். சுருக்கமாகக் கூறினால், ஒரு அட்டகாசமான திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களையும் நாம் இந்த தமிழ் நாவல்களில் காணலாம்.

அழுத்தமான கதைக்கரு அதையொட்டி நடைபெறும் சுவாரசியமான நிகழ்வுகள், எதிர்பாரா திருப்பங்கள் என்று இந்தப் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு நாவலுமே ஒரு வாழ்வியலை நமக்கு காட்சிப் படுத்துகின்றன. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களை, நீங்கள் இந்த நாவல்களில் கதாபாத்திரங்களாகப் பார்க்கலாம்.

இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கை முறையிலிருந்து ஒரு மீட்சி வேண்டுமா, நீங்கள் ஒரு ரொமான்ஸ் நாவலை தேர்ந்தெடுத்து வாசிக்கலாம். ஒரு கோடை விடுமுறையில் கிராமத்திலுள்ள தாத்தா பாட்டி வீட்டில் சென்று தங்கிவிட்டு வரும் அனுபவத்தை அடையவேண்டுமா, அதற்கெனவே வரிசைக் கட்டி காத்திருக்கின்றன மண்மணம் மாறாத கிராமியநாவல்கள். அந்தந்த வட்டார மொழிகளில் எழுதப்படும் இந்த வகையான தமிழ் நாவல்கள் ஒருஉணர்வுப் பூர்வமான வாசிப்பு அனுபவத்தை வழங்கும் உங்களுக்கு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

தாயன்பின் பெருமை, தந்தையின் தியாகம், அண்ணன் தங்கை நேசம், சகோதர்களின் பாசம், கணவன் மனைவிக்கிடையே இழையோடும் காதல் என இந்தப் பகுதியில் இடம் பெற்றிருக்கும்நாவல்கள் ஒவ்வொன்றும் ஓராயிரம் உணர்வுக் குவியல்களை, வாசிப்பவர்களுக்கு பரிசாக வழங்குகின்றன. இதில் உலவும் ஒரு கதா பாத்திரத்திலேனும் உங்களை நீங்கள் காண்பீர்கள்.

பல்வேறு ஜானர்களில் இடம் பெற்றிருக்கும் இந்த தமிழ் நாவல்கள் (novels in tamil) சலிப்படைய வைக்கும் உங்களுடைய ஓய்வு நேரங்களை, புத்துணர்ச்சி உடைதாக மாற்றி அமைக்கும். உங்கள் மனக்கண்ணில் புதியதொரு உலகத்தை படைத்து, அதில் உங்களையும்ஒரு கதாபாத்திரமாக உலவ வைக்கும்.

மேலும்
அந்தி நேரத் தென்றல் காற்று ...     அத்தியாயம் 1:   கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள் அனிதா. உடலோடு பாந்தமாக ஒட்டிய சுடிதார். நீண்ட கேசம் அழகான குண்டு கன்னங்கள், சற்றே சிவந்திருந்த உதடு என அழகுக் களஞ்சியமாகக் காணப்பட்டாள். தன்னைத்தானே பார்த்துக்கொண்டு திருப்தியுற்றவளாக கைப்பையை எடுத்தாள்.   "அம்மா! நான் தாத்தா பாட்டி வீட்டுக்குப் போயிட்டு வரேன்" என்று குரல் கொடுத்தவாறே தெருவில் இறங்கி நடந்தாள். நடக்கும் தூரம் தான் தாத்தா வீடு. அவர்கள் அனிதாவின் தாய் வழி அல்லது தந்தை வழி தாத்தா பாட்டி ...
4.8 (270)
13K+ படித்தவர்கள்