“யாருங்க அது மீனு?” ஜெயா வாசலை மறித்துக்கொண்டு நின்றிருந்தாள். “வீட்டுக்குள்ள நுழையங்காட்டியும் மீனு கருவாடுன்னு தெருவுலயே வச்சி என்ன விசாரணை? வழியை விடு” எரிந்துவிழுந்தபடி, அவளை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் வெற்றி. “அவர் சொன்னது சரிதான். மீனுன்னு சொன்னா தெரியாது. மீனுக்குட்டின்னு சொன்னாதான் தெரியும்னாரு” ஜெயா வெற்றியின் அலுவலகப் பையைத் திறந்து மதிய உணவு டப்பாவை வெளியில் எடுத்தபடியே சொன்னாள். வெற்றியின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய்த் தெரிந்தது. “யாரு மீனுக்குட்டியா?” சட்டென்று ...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு