<p>கொங்கு மண்டலத் தமிழன். பிறந்தது துணியில் அன்னியச் செலாவணி நெய்யும் திருப்பூர் மாநகரம். விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் உலகம் சுற்றிய, பல முகங்கள் கொண்ட அப்பாவுக்கும், விவசாயக் குடும்பத்தில் பிறந்து பள்ளிக் கல்வி மட்டுமே முடித்து, இளம் வயதிலேயே திருமனமாகி இருப்பதிரண்டு வயதிலேயே என்னையும் என் தமையாளையும் ஈன்றிருந்தும் கையில் கிடைத்ததையெல்லாம் படித்து என்னையும் படிக்கத்தூண்டி பெரும் கனவுகளை விதைத்த அம்மாவுக்கும் இரண்டாவதாகப் பிறந்தவன். திருப்பூர், சத்தி, குமாரபாளையம் என பள்ளி கல்லூரி படிப்புகளை முடித்தேன். வளர் பருவம் முழுவதும் ஐஏஎஸ் கனவோடு சுற்றித் திரிந்தும் தொலைத்துவிட்ட சில வருடங்களுக்குத் தண்டமாகத் தற்போது பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணி.</p>
<p>நான் எழுதுவது பெரும்பாலும் எனது கனவை அடைய முடியாத வலியைப் போக்கிக் கொள்ள. நான் படித்தது, உணர்வது, நான் என் சமுதாயத்துக்கு செய்ய நினை'த்தது/பது போன்றவை என் எழுத்தில் இருக்கும்.</p>
<p>சினிமா, நடிகர் நடிகையர் பற்றி அவ்வளவாக இருக்காது. தமிழ், வேளாண்மை, தேசம், வெளியுறவு, பொருளாதாரம், அறிவியல், சமுதாயம், வரலாறு முதிலியவையே பெரும்பாலும் இருக்கும், அவ்வப்போது சிறுகதைகளும்! </p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு