பெயர் ஹரீஷ். இயற்பெயர் புனைப்பெயர் எல்லாம் ஒன்றே தான். CMA முடித்து சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாண்மை கணக்காளராகப் பணி.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது யதேச்சையாய் சுஜாதாவின் கொலையுதிர் காலம் கைகளில் கிடைக்க அன்று ஒட்டிக் கொண்ட சுஜாதா இன்னும் விட்டு விலக மறுக்கிறார்.

எழுதுவதற்கான தைரியத்தை கொடுத்தது சுஜாதாவின் எளிய மொழி என்று கூட சொல்லலாம். ராஜேஷ் குமார் பிடிக்கும்.

ரொம்பக் காலம் சுஜாதாவைத் தவிர வேறெதையும் வாசிக்காமல் இருந்து, அதன் பிறகு பற்றுதல் உண்டானது எஸ்.ரா வின் எழுத்துக்களின் மேல்.

இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்புத் தளத்தை விரிவுபடுத்தும் பொருட்டு பாலகுமாரன், ஜெயகாந்தன், ஜெயமோகன் க நா சு என்று பழகிக் கொண்டிருக்கிறார்.

இப்போதைக்கு எழுதுவது சிறுகதைகள் மட்டுமே. அயல் சினிமாக்கள் பார்க்க விருப்பம் அதிகம்.

பி ஏ கிருஷ்ணனின் புலி நகக் கொன்றை போல் ஒரு நாவல் எழுத வேண்டுமென்பது வாழ்க்கை ஆசை.

ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு