பல கோடிகள் போட்டு, பல ஆயிரம் பேர் உழைப்பில் உண்டாகும் ஒரு படத்தை, படம் வெளியான அன்றே, நாலே பத்திகளில், அதன் பாதகங்களைப் பெரிதாகச் சொல்லி, உழைத்தவர்களை நொடித்துப் போகச் செய்யக் கூடாதெனும் ஒரு விதி, ...
👤என் பார்வையில் கபாலி 👈🏻
இது நாம் பார்த்து பழகிய ரஜினி வழி படம் அல்ல...
பார்த்து பழக வேண்டிய ரஞ்சித் போன்ற இளம் இயக்குனர்களின் வழி படம்... இது போன்ற படங்களை ஆதரிக்கவில்லயெனில், பிறகு நாம் மசாலா படம் எடுக்கும் இயக்குனர்களை திட்டி ஒரு பலனும் இல்லை... பறந்து பறந்து 100 பேரை அடித்து துவைக்கும் ரஜினியை பார்த்து சலித்து போன நமக்கு இப்படம் ஒரு புதுமையான அனுபவம்...
25 வருடத்திற்கு பின் தன் மகளை பார்க்கும் போதும், இறந்துவிட்டால் என்று நினைத்த தன் மனைவி உயிரோடு தான் இருக்கின்றாள் என்று தெரிந்து அவளை தேடி அலையும் பொழுதும், ரஜினியின் நடிப்பு அருமை... இந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த திரு.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
"தர்மம் என்பது உனக்குத் தேவையானவற்றை கேட்டுப் பெறுவது"... "அம்பேத்கார் coat suit போட்டதற்க்கும், காந்தி சட்டை போடாமல் இருப்பதற்க்கும் பின்னால் ஒரு அரசியல் உண்டு" போன்ற கூர்மையான வசனங்களை எழுதிய ரஞ்சித்திற்கும் அதை தன் படத்தில் வைக்க அனுமதித்த ரஜினி அவர்களுக்கும் ஒரு பாராட்டு...
அட்டக்கத்தி தினேஷ்... ரஜினி படத்தில் இன்னொரு ஆண்மகனின் நடிப்பை பார்த்து ரசித்தது இதுவே முதல் முறை... அருமை தினேஷ்... ராதிகா, தன்ஷிகா, ரித்விகா - சிறந்த தேர்வு...
ஒவ்வொருவருக்கும் தங்களை நிரூபிக்க தகுந்த வாய்ப்பு... 'செத்து தான் கிடந்தேன் உன்னை பார்க்கும் வரை' என்று கூறும் இடத்தில் ராதிகாவும், 'மாசமா இருக்கிற உன் மனைவியை காப்பாற்ற துப்பில்லை' என்று திட்டும் இடத்தில் ரித்விகாவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்... பாடல்களை போட்டு நேரத்தை வீணடிக்காமல் அவற்றை ஆங்காங்கே தெளித்து விட்டிருப்பது இயக்குனரின் முத்திரை...
இது ரஜினியின் சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான பதிவு... ரஜினியிடம் மசாலா படத்தை மட்டும் தான் ரசிப்பேன் என்று கூறும் ரசிகர்கள் தேவையில்லாமல் இப்படத்திற்கு சென்று தூங்கிவிட வேண்டாம்...
இது ஒரு இயக்குனரின் படம்... நல்ல சினிமாக்களை ரசிக்கும் ரசிகனுக்கான படம்... இப்படத்தை தேர்வு செய்த ரஜினிக்கு என் நன்றிகள்... மொத்தத்தில்... மகிழ்ச்சி...
😀😄😃
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்