சுந்தரலிங்கம் அகரமுதல்வன் தமிழீழத்தின் பளை எனும் ஊரில் 1992ல் பிறந்தவர்.தொடரும் நினைவுகள்,அத்தருணத்தில் பகை வீழ்த்தி,அறம் வெல்லும் அஞ்சற்க ஆகிய மூன்று கவிதைத்தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன.நான்காவது கவிதைத் தொகுப்பான "டாங்கிகளில் சரியும் முல்லை நிலா " அடுத்தமாதம் வெளிவரவிருக்கிறது. இணையங்களில் கலை இலக்கியம் அரசியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் இவர் நிகழ்த்துகலையில் ஈடுபாடு கொண்டு திறமையாக செயற்படுபவர்.

இனப்படுகொலைக்கு பின்பான ஈழ இலக்கியத்தில் தனது கவிதைகளின் மூலமும் உரைகளின் மூலமும் தாக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்தி வருபவர். யுத்தம் மாபெரும் இனஅழிப்பு என இரண்டையும் வெவ்வேறு தளத்தில் ஊடுருவி அரச பயங்கரவாதத்தின் கொடூரங்களை தனது இலக்கியத்தின் ஊடே வெளிப்படுத்துபவர்.

இவரது அத்தருணத்தில் பகை வீழ்த்தி என்கிற தொகுப்பு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது மற்றும் கலகம் விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு