வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. முரண்பாடான கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். நான் மிகவும் வித்தியாசமான எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் தேடி பிடித்து வாசிப்பேன். நான் எத்தனை அடிமை என்று ஒரு விளக்கத்தில் சொல்ல வேண்டும் என்றால் வேள்பாரி முழுவதையும் சிறிய கைப்பேசி திரையிலேயே படித்து முடித்தேன். தஞ்சை பிரகாசம், வேலாஇராமமூர்த்தி, ராஜேஷ் குமார்,பாலகுமாரன்,ஜெயகாந்தன்.... இப்படி நிறைய. எனக்கு ஒரு ஆதங்கம் உண்டு ஏன் இதுபோன்று கதைகளை நாம் பெண் எழுத்தாளர் புனையவில்லையே? இவர்களை படித்தனால் என் எழுத்துகளில் சில நேரங்களில் அவர்களின் வாடை அடிக்கும். திரைபடம் பார்ப்பதும் எனக்கு மிக பிடித்தமான பொழுதுபோக்கு. என் எழுத்துகளை புரிந்து பிடித்தவர்கள் மட்டும் போதும் என்று நினைக்கும் கர்வம் உண்டு. இந்த கர்வம் புதுமைப்பித்தனை படித்த போது உண்டானது. எழுத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் என் எழுத்துகளையும் சற்றே வாசித்து பாருங்கள் 🤍💜
என் கதைகள் உங்கள் மூளையை சென்றடைவதை நான் விரும்பவில்லை மாறாக அது உங்கள் மனதை தொட்டால் போதும்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு