pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்

5
1011

வெளிப்படுத்த முடியாத இயல்பின் சாயல் வெளிப்படுத்த முடியாத உன்னை யாரென்று தெரிந்த பின்னும் உன் இயல்பினை ஒளித்து வைத்துவிட்டதாய் நீ சொல்லும் வெற்றுச் சமாதானம் வேடிக்கையாய் இருக்கிறது . உன்னுடைய ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மனுஷி

எழுத்து ஒன்றே நான் வாழ்ந்தேன் என்பதற்கான அடையாளம்… என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவரும் இந்த நேரத்தில் நான் முதன்முதலில் கவிதை எழுதிய அனுபவத்தினைச் சற்று நினைத்துப் பார்க்கிறேன். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது, ஒருநாள் பள்ளி முடிந்து பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். நான் வந்த பேருந்தில் ஒரு ஐந்து அல்லது ஆறு மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தன் ஜொல்லொழுகும் சிரிப்பால் நான் உட்பட அனைவரையும் கவர்ந்திழுத்தது. அந்தச் சிரிப்பை இன்னமும்கூட வார்த்தைகளில் கொண்டுவர முடியவில்லை. இந்த மனித வாழ்க்கையில் நம்மால் வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட முடியாமல் தவிக்கும் அதி அற்புதங்களில் அதுவும் ஒன்று என்றே தோன்றுகிறது. அன்று வீட்டிற்குச் சென்றதும் வீட்டுப் பாடம்கூட செய்யாமல் அந்தக் குழந்தை எனக்குள் ஏற்படுத்திய பரவசத்தை, சந்தோஷத்தை, பேரின்பத்தைக் கவிதையாக எழுதத் தொடங்கினேன். அந்த வயதில் கவிதை என்றால் என்ன என்பது குறித்து எவ்விதப் புரிதலும் எனக்கு இருக்கவில்லை. கவிதை என்றால் ஒன்றன் பின் ஒன்றாக வார்த்தைகளை அடுக்கி எழுதுவது, இரண்டாவது வரியை முதல்வரிக்குச் சற்று உள்தள்ளி எழுதுவது என்கிற அளவில்தான் கவிதை குறித்து நான் அறிந்து வைத்திருந்தது. அன்று, நான்கு ஐந்து பக்கங்களை வீணாக்கியும்கூட அந்தக் குழந்தையின் சிரிப்பை, ஜொல்லொழுகும் உதடுகளை, பிஞ்சுப் பாதங்களை, சின்னஞ்சிறு விரல்களை, இன்னும் இன்னமுமான எதைப் பற்றியும் எழுதமுடியாமலேயே அன்று தூங்கிப் போனேன். சிறு வயதிலிருந்து கிடைத்த தனிமை நூலகங்களை நோக்கி என்னை நகர்த்தி விட்டது. சிறுவர் கதைகளாகத் தேடித் தேடிப் படித்து, படித்ததைத் தோழிகளிடம் சொல்லிச் சிலாகித்து… இப்படியாகப் போனது பள்ளிப் பருவம். ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நான் இப்போது இல்லை. வாழ்க்கை என்னைத் தலைகீழாய் புரட்டிப் போட்டிருக்கிறது. அதிலும், புதுவைப் பல்கலைக்கழக வளாகம் என் வாழ்க்கையை, என் வாசிப்பை, என் இருப்பை, என் பார்வையைத் திசைமாற்றி விட்டுவிட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்பில் சேரும்வரை நான் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிடுவேன் என்றோ, கவிஞராக என்னை அடையாளப்படுத்திக் கொள்வேன் என்றோ, அப்படியான ஓர் அடையாளத்தைத்தான் என் மனம் விரும்பியது என்பதையோ கொஞ்சமும் நினைத்ததில்லை. ஆனால், சிறு வயதிலிருந்தே நான் இந்தப் பூமியில் வாழ்ந்தேன் என்பதற்கான அடையாளத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தேன். எழுத்தின் மூலமே அது சாத்தியம் என்பதை இப்போது உணர்கிறேன். நான் ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வியும், அதனால் யாருக்கு என்ன பயன் என்ற கேள்வியும் எனக்குள்ளாக எழுகிறது.இது எப்போதும் என்னை அலைகழிக்கின்ற ஒரு கேள்வியாகவே இருக்கிறது. என் கவிதைகளை வாசித்த சில நண்பர்களும் தோழிகளும் சொன்னார்கள் ஏன் உன் கவிதைகள் நன்றாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலும் அறை, தனிமை, விரக்தி, வெறுமை, கண்ணீர் இப்படியே இருக்கிறதே. கொஞ்சம் பாசிட்டிவாக ஏன் எழுதவில்லை என்று. நான் என்னை எழுதிப் பார்க்கிறேன். வாழ்க்கை எனக்குக் கொடுத்த பேரனுபவங்களை மொழியின் துணைகொண்டு சாத்தியப்படுத்த முனைகிறேன். நான் வாழும் வாழ்க்கையை, வாழ நினைக்கிற வாழ்க்கையை, அப்படி வாழ முடியாமல் போகும் அபத்தங்களை எழுதித் தீர்க்கிறேன். நான் என்னவாக இருக்கிறேனோ, என்னவாக வாழ்கிறேனோ, எதை உணர்கிறேனோ அதைக் கவிதையாக்குகிறேன். பிரபஞ்சமாய் விரியும் கனவுகளைச் சுமந்தபடி அறைக்குள் முடங்கிப் போகிற சாபம் என் எழுத்துகளுக்குள் ஊடாடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. இந்தக் கவிதைத் தொகுப்பு வெளிவருவதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவரும், இயல்பிலேயே என்மீது பேரன்பும், அக்கறையும் கொண்டவருமான நண்பர் செ. ரவீந்திரன், நல்ல நண்பனாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருந்து என்னை நெறிப்படுத்தி வரும் என் பேராசிரியர் பா. இரவிக்குமார், என் வாழ்வை இனிக்கச் செய்த என் குட்டி இளவரசி நிலா, குட்டித் தங்கை சிநேகா, முதன்முதலாக என் கவிதைகள் அனைத்தையும் ஒருசேர வாசித்து அதுகுறித்த தன் கருத்துகளை உடனடியாகப் பகிர்ந்து கொண்ட என் இலக்கிய நண்பர் ஷைலபதி, இராஜேஸ்வரி அம்மா, வடக்குவாசல் பெண்ணேஸ்வரன், கீற்று.காம், புதுப்புனல், இந்தத் தொகுப்பு வெளிவந்த பின்னர் மூச்சு முட்டும் இந்த வாழ்க்கை நெருக்கடியில் கொஞ்ச நேரத்தைச் செலவிட்டுக் கவிதைகளைப் படித்துவிட்டு, திட்டியோ அல்லது பாராட்டியோ பேசவிருக்கிற என் வாசக இதயங்கள் என அனைவரையும் இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    షావేట్ జైన్
    08 மே 2017
    Hi Manushi, you are writing very well. I head blogger community at mycity4kids, which has 8 milion visitors in a month. We would love to hear your story about women, parenting, children, etc. You can write in Tamil. To start writing please visit the below link https://www.mycity4kids.com/parenting/admin/setupablog If you face any issue, you can write to me at [email protected]
  • author
    Rajistephen 14
    30 ஜனவரி 2022
    anba irukkaravanga ellarum paithiyangala aakapadaranga......nammada valium vedhanaum poi...dramanu sollrappo ellam veruththu pokum.....ennavo ponga...azhukaithaan varuthu
  • author
    Sakthi 📖🖋️✨️ ‌‌
    10 செப்டம்பர் 2019
    நா இன்னிக்தான் படிச்ச வாழ்க்கையில ரொம்ப இன்ப,துன்பங்கள அனுபவிச்சவங்களால இப்டி எழத முடியும்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    షావేట్ జైన్
    08 மே 2017
    Hi Manushi, you are writing very well. I head blogger community at mycity4kids, which has 8 milion visitors in a month. We would love to hear your story about women, parenting, children, etc. You can write in Tamil. To start writing please visit the below link https://www.mycity4kids.com/parenting/admin/setupablog If you face any issue, you can write to me at [email protected]
  • author
    Rajistephen 14
    30 ஜனவரி 2022
    anba irukkaravanga ellarum paithiyangala aakapadaranga......nammada valium vedhanaum poi...dramanu sollrappo ellam veruththu pokum.....ennavo ponga...azhukaithaan varuthu
  • author
    Sakthi 📖🖋️✨️ ‌‌
    10 செப்டம்பர் 2019
    நா இன்னிக்தான் படிச்ச வாழ்க்கையில ரொம்ப இன்ப,துன்பங்கள அனுபவிச்சவங்களால இப்டி எழத முடியும்