<p>நேசமித்ரன் என்கிற புனைப்பெயரில் எழுதி வரும் திருராம்சங்கர், க.புதுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்து தற்போது திண்டுக்கல் நகரில் வசித்து வருகிறார். கவிஞர், புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பெரும்பாலான இவரது படைப்புகள் பெண்ணியம் குறித்தும் நவீன இந்திய சமூகக் கலாச்சாரத்தின் மீதான அறிவியலின் தாக்கம் குறித்தும் உருவகங்களின் வழி உரையாடுபவை. இவரது முதல் கவிதைத் தொகுப்பான கார்ட்டூன் பொம்மைக்குக் குரல் கொடுப்பவள் 2010ல் வெளியானது. இரண்டாவது கவிதைத் தொகுதி - மண்புழுவின் நான்காவது இதயம். உதிரிகளின் நீலப்படம் எனும் விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு 2013ல் வெளியாகியுள்ளது. மூன்றாம் பாலினம், குழந்தைகளின் அக உலகம், மரணம் என வெவ்வேறு பிரச்சினைப்படுகளைப் பேசிய நவீன சிறுகதைகளைத் தொகுத்து இரண்டு பிக்சல் குறைவான கடவுள் என்றொரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.உடலரசியல்,மூன்றாம் பாலினம்,தற்பாலுமை,ஆட்டிசம்,குழந்தைகளின் மனச்சிதைவு மற்றும் நாடுகடத்தப்பட்ட,புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகள் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டு 6 ஆண்டுகளாக வெளிவரும் வலசை என்ற நவீன சிற்றிதழின் ஆசிரியராய் இருக்கிறார்.</p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு