எஸ். அர்ஷியா

சையத் உசேன் பாஷா,

மகள் பெயரில் எழுதும் தந்தை.

தோட்டக்கலை சார் தொழிலை உணவுக்கும்

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை உயர்வுக்கும் செய்பவர்.

முதல் நாவலான ‘ஏழரைப்பங்காளி வகையறா‘,

உருதுமொழிபேசும் தமிழ்நாட்டு முஸ்லிம்களில்

ஒருகுழுவினரைப் பற்றியது.

உருது முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பற்றிய முதல் நாவல் இது.

பண்டங்களை விளைவிக்கும் நிலத்தையே பண்டமாக்கி

கூறுபோட்டு விற்கும் பெருநிலவணிகமான ரியல் எஸ்டேட்டையும்

அதில் அரசியல்வாதிகளின் கையளிப்பையும் பகிரங்கப்படுத்துவது,

இரண்டாவது நாவல் ‘பொய்கைக்கரைப்பட்டி‘.

இரண்டு நாவல்களுக்குப்பின் வெளியான ‘கபரஸ்தான் கதவு‘,

இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.

அரசு நிறுவனங்களால் ஆறுகளையொட்டி உருவாக்கப்படும்

கரையோரச் சாலைகள்

ஆற்றங்கரை நாகரீகத்தையும் அங்கு வசிக்கும் மக்களையும்

உருக்குலைக்கும் அபாயத்தையும்

ஒரு முஸ்லிம் இளைஞனின் திருமணத்தையும் காட்சிப்படுத்துவது,

மூன்றாவது நாவலான, ‘அப்பாஸ்பாய் தோப்பு‘.

‘நிழலற்ற பெருவெளி‘யாக

பிரஞ்சு நாவலாசிரியர் தாஹர்பென் ஜீலோவ்னின்

நாவல் மொழி பெயர்த்தது ஐந்தாவதுபடைப்பு.

2008 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த

பல்வேறு சம்பவங்களில் 15 நிகழ்வுகளை மட்டும் உள்ளடக்கியக்

கட்டுரைத் தொகுதி, சரித்திரப் பிழைகள்.

தமிழகக் கல்வித்துறையின் அவலங்களை சமரசமின்றி

அலசிப் பிழியும் கரும்பலகை

தமிழின் முக்கியமானதொரு படைப்பு.

எட்வர்ட் செய்தின் பார்வையில் ‘பாலஸ்தீனம்‘ குறித்த மொழிபெயர்ப்பு நூலும்

திப்பு சுல்தானின் வாழ்க்கைப் போராட்டம்

‘திப்பு சுல்தான்: ஒரு வளர்பிறையின் வரலாறு‘

எனும் தலைப்பில் வெளியாகியிருக்கின்றது.

‘மரணத்தில் மிதக்கும் சொற்கள்‘ இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

தமிழ்நாடு அரசின் சிறந்த நாவலுக்கானப் பரிசையும்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின்

அழகியநாயகி அம்மாள் விருதையும் பெற்றவர்.

மதுரையை மையமாகக் கொண்டு மறுபடியும் ஒரு நாவலும்,

நாயக்கர்கள் வரலாறும் எழுத்தில் உள்ளது….

எஸ். அர்ஷியா,

1/593 (9), பாமா நகர் முதல் தெரு,

தபால்தந்தி நகர் (அஞ்சல் நிலையம்),

மதுரை – 625 017.

பேச : 99948 73456

[email protected]

www.arshiyaas.blogspot.com

www.facebook.com /arshiya syed basha.1690

ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு