வாழ்க வளமுடன் . குண்டலினி யோகப் பேராசிரியை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொண்டாற்றி வரும் இல்லத்தரசி.
குடும்பத்தில் அமைதி இருந்தால் தான் தொண்டாற்ற குடும்ப உறவுகள் ஒத்துழைப்பார்கள்.
அதற்கு நம் உடல் மன வளம் பேணுவது அவசியமாகிறது.. யார் எந்த வேலை சொன்னாலும் இன்முகத்தோடு, பொறுமை காத்து வேலை செய்ய மனதை பக்குவ நிலையிவ் பழக்கி வருகிறேன்.. அதற்கு மனவளக்கலை பயிற்சி உறுதுணையாக இருக்கிறது. யோகக் கல்வியை வாழ்க்கையில் கடைபிடித்துக் கொண்டு வருகிறேன். 100% Perfect என்று கூற இயலா விட்டாலும். மனசாட்சிக்கு உட்பட்டு ஓரளவு இனிமையாகவும் அமைதியாகவும் வாழ்க்கை சீராக செல்கிறது.
ஒற்றுமையோடு குடும்பத்தில் இருக்க முடிகிறது. அதற்கு எம் குரு வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கும், எங்களுக்கெல்லாம் மிகப் பெரிய வழிகாட்டியாக இருக்கும் வ.உ.சிதம்பரனார் பிள்ளை கப்பலோட்டிய தமிழர் என்று போற்றப்படும் ஐயா அவர்களின் பேத்தி முது நிலை பேரா. பிரமுக்குட்டி அம்மா அவர்களுக்குக் கீழ் நாங்கள் Diploma in yoga for Human excellence and M.A. Yoga for Human excellence படித்து பள்ளி கல்லூரி கிராமங்களில் சேவையாற்றும் அரிய வாய்ப்பும் எங்களுக்கு கிட்டி வருகிறது. இணைய வழி சேவை மற்றும் எழுத்து சேவை வாய்ப்பு கிடைக்கும் போது செய்து வருகிறேன். நன்றி. வாழ்க வளமுடன் 🙏
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு