<p><span style="color: #263238; font-family: arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;">நான் விஜயகுமார், தில்லையம்பலக்கூத்தனின் எல்லையில் பிறந்து வளர்ந்தவன். தற்போது அமீரகத்தில் வரைகலை நிபுனராக பணி புரிந்து வரும் நான் தமிழின் மீது கொண்டு அலாதி பிரியமே என்னை எழுத தோற்றுவித்தது எனலாம். தமிழின் மீதும், சோழ சாம்ராஜ்யத்தின் மீதும் தனிப்பிரியம் எனக்கு பிறந்த இடமே சோழ தேசம் என்பதால் இயல்பிலேயே சோழ தேச வரலாற்றை தேடிப்படிப்பதில் ஆர்வமுள்ளவன், அப்படி நான் வாசித்த நாவல்களும், புதினங்களும், காப்பியங்களும் தான் என்னை எழுத தூண்டியவை. சிறுவயதில் இருந்தே இருந்தே வாசிக்கும் பழக்கம் மட்டுமே உடைய எனக்கு தீடிரென தோன்றிய சில கற்பனை காட்சிகளுக்கு உயிர் கொடுத்தால் என்ன என்பனவையே நான் எழுதும், எழுதிக்கொண்டிருக்கும், எழுதப்போகும், ஒரு நிமிடக்கதை, சிறுகதை ஆகியவை.</span></p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு