சாதாரண இல்லத்தரசி……….2000 மாவது ஆண்டு வரை! 1997 ல் மகளுக்கு திருமணம். மாப்பிள்ளை கன்னடக்காரர். பெண்ணைக் கொடுக்கிறோம் என்று அவர்களது சம்பிரதாயம் ஒன்று கூட விடாமல் ஒரு கன்னடத் தோழியைக் கேட்டுக் கேட்டு எல்லாம் செய்தேன்.

வாழைக் காய் கூடாது என்றார்கள்; உளுந்து வடைக்கும் ஒரு பெரிய NO! (நம்ம வீட்டில் நீதான் வாழைக்காய் கறியமுது இல்லாமல், வடை இல்லாமல் இப்படி ஓரு கல்யாணம் செய்திருக்கிறாய் என்று சென்னையில் இருக்கும் என் உறவினர்கள் இன்றும் சொல்லிக் காட்டுகிறார்கள்!) பெண்ணுக்கு இரண்டு தாலிகள் – ஒன்று அம்மாவே கட்ட வேண்டும் என்றார்கள்! இப்படியாக பல பல சம்பிரதாய வித்தியாசங்களை சமாளித்து திருமணத்தை நடத்தி முடித்தோம்.

இதை கருவாக வைத்து ஒரு கதை எழுதினேன். “அத்தையும் ராகி முத்தையும்” என்ற பெயரில். என் முதல் கதை – மங்கையர் மலரில் 2000 மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. என் எழுதும் திறமையில் அப்போதுதான் எனக்கே நம்பிக்கை வந்தது.

‘அவள் விகட’னிலும் ‘மங்கையர் மலரிலும் நிறைய எழுதினேன். என் படைப்புக்கள் அத்தனையும் ஒரு தொகுப்பாக இருக்கட்டும் என்று WordPress இல் எல்லாவற்றையும் பதிப்பித்துக் கொண்டிருக்கிறேன்.

படிக்கும் அனைவருக்கும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு