ஏதோ விளையாட்டாக எழுத ஆரம்பித்து பின்னர் 'அட.. கொஞ்சம் ஜாலியாக இருக்குதே இந்த எழுதுற மேட்டர்!' என்று உணர்ந்து எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். எழுத்து என்பது வாசிப்பதற்கு இலகுவாகவும் ஒருமுறை வாசித்தாலே புரிந்துவிடும்படியான எளியநடையில் மனதைத் தொடும்படி சில நேரம் மனதைப்பிசையும்படி இருக்கவேண்டும் என்பதில் என்னளவில் கவனமாக இருக்கிறேன். அதைக் கருத்தில் கொண்டு மட்டுமே எழுதுகிறேன். இலக்கியம் மற்றும் மூன்று முறை வாசித்தும் புரியாத கவிதைகள், செய்யுள் நடையில் பெருங்கதை இவையெல்லாம் எனக்கு கொஞ்சம் அலர்ஜிட்டிக். பிடித்த எழுத்தாளர்கள் சுஜாதா, ராஜேஷ்குமார். பிடித்த கவிதைகள் பெரும்பாலும் வைரமுத்து எழுதியவை. இசையென்றால் கொள்ளைப்பிரியம். ஒரு இசைக்குழுவில் பாடிக்கொண்டுமிருக்கிறேன்.

எழுதுவதற்கு கண்டிப்பாக மெனக்கெடக்கூடாது, நமக்கு என்ன வருகிறதோ அதைப்பற்றி மட்டுமே எழுதவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். வரலாறு, வானசாஸ்திரம், நாட்டுநடப்பு, உலகப்புள்ளி விபரங்கள், இணையச் செய்திகள் என்று தேடித்தேடி ரெஃபர் செய்யாமல் காத்துவாக்கில் அதுவாய் வந்து காதில் விழுபவைகள், பார்த்தவைகள், கேட்டவைகள், படித்தவைகள், ரசித்தவைகள் மற்றும் உணர்ந்தவைகள் இவற்றைப் பற்றி மட்டுமே எழுதவேண்டும் என்ற எண்ணமிருக்கிறது.

மற்றபடி வேலூரிலிருந்து புறப்பட்டு அங்கு இங்கு என்று சில ஊர்களைச் சுற்றிவிட்டு பெங்களூரில் கரையொதுங்கி இருக்கும் ஒரு சாதாரண குடியானவன் நான். ஐடி கம்பெனியில் வேலை என்பதெல்லாம் வயிற்றுப்பிழைப்புக்காகவும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மெயில் ஐடியில் பகிருங்கள்.

ஃபேஸ்புக் முகவரி- https://www.facebook.com/sivakumar.venkatachalam

ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு