pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

தமிழ் வளர்க்க

3
265

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

இயற்பெயர் : கிருஷ்ணமாச்சாரி ரங்கஸ்வாமி புனைப் பெயர் : தமிழ்த்தேனீ பிறந்த வருடம் : 01/07/ 1947. நான் தமிழ்த்தேனீ என்ற பெயரில் என் படைப்புகளை உருவாக்கி வருகிறேன். நான் ஒரு திரைப்பட நடிகன், தமிழ் எழுத்தாளன், நாடகாசிரியர், இணையதள எழுத்தாளன். என்னுடைய படைப்புகளில் மனிதம் தான் சிறந்தது என்று வலியுறுத்தி உலகில் மனிதம் தான் சிறந்த மதம் என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன். என் பெற்றோர் ஆர் ரங்கஸ்வாமி, தாயார் ஆர் கமலம்மாள் அவர்களுக்கு நான் எட்டாவது பிள்ளை. என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்கள் ஒரு எழுத்தாளர். நான் கமலம்மாள் அவர்களுக்கு பிறக்கும் போது ப்ரசவம் பார்த்த டாக்டர் எழுத்தாளர். டாக்டர் திரிபுரசுந்தரி என்னும் ப்ரபலமான எழுத்தாளர் லக்ஷ்மி அவர்கள் என்னை “அவர் கையில் பூத்த மலர்” என்று வர்ணிப்பார்கள். என் தாயார் எழுதிய கிருஷ்ணதீர்த்தம் என்னும் கதை முதற்பரிசு பெற்று திரு சங்கராச்சாரியார் அவர்களால் தங்கக்காசு பெற்றது. அவர் எழுதிய பாடல்கள் திருமதி பாம்பே சகோதரிகளால் பாடப்பட்டு “தெய்வீகப் பாமாலை” என்னும் பெயரில் ஒலி நாடாவாக சங்கீதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. லூகாஸ் டீ வீ எஸ் என்னும் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு பிரிவிலும் டூல்ரூம் ஸ்டோர்ஸ் பொறுப்பாளராகவும் பணியாற்றினேன். 34 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன். முக்கியமாக தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் மின்தமிழ் கூகிள் குழுமம் வாயிலாக நம்முடைய மரபு சார்ந்த புத்தகங்களை கணினியில் மின் பதிப்பாக மாற்ற பழம் பெரும் புத்தகங்களை, படியெடுத்து இ-புத்தகமாக மாற்றி வருங்காலத் தலைமுறைகள் கணிணியிலே படித்து மகிழ ஆவன செய்கிறேன், நமது பாரம்பரிய கலைகளான கட்டிடக் கலைகளின் வெளிப்பாடாகிய ஆலையங்களைப் புகைப்படங்கள் எடுத்து அந்த ஆலையங்களின் சரித்திரங்களை ஆராய்ந்து எழுதி வருகிறேன். பதிவு வகை: கதை, கட்டுரை,கவிதை ,சமையல் ,நாடகம் , படைப்பின் மையக் கருத்து: தமிழ், இலக்கியம், அரசியல்,சமூகம்,சீர்திருத்தம்,பெண்ணுரிமை, சமயம் - இந்து ,கணினி,அறிவியல், சிந்தனை. நான் என் 20 ஆவது வயதிலிருந்து நாடகங்களை எழுதி இயக்கி அதில் நடித்தும் வருகிறேன், தமிழக தொலைக்காட்சி நாடக வரலாற்றில் மிகவும் பகழ் பெற்ற மெகா தொடரான "சித்தி" தொடரில் மேனேஜர் சாரங்கன் என்ற பாத்திரத்தில் (வில்லனாக) நடித்து மக்களைக் கவர்ந்தேன். அதைத்தொடர்ந்து ஆனந்தம், கோலங்கள், போன்ற 100 க்கும் மேலான பல தொலைக் காட்சித் தொடர்களிலும் மற்றும் அன்பே சிவம், ஆறு, ரமணா, அது ஒருகனாக் காலம், சாமி, சிவாஜீ, வீரசேகர் , திருட்டுப் பயலே, தாண்டவம் போன்ற 50 திரைப்படங்களிலும் நடித்திருக்கிறேன். 14 நாடகங்கள் எழுதி இயக்கி ஔவை ஷண்முக விருது, பம்மல் சம்பந்த முதலியார் விருது போன்ற பல முதற்பரிசுகளை வென்றுள்ளேன். மற்றும் தமிழ் ஆராய்ச்சி, பயணக்கட்டுரைகள், நாடகங்கள், கதைகள் என்று தன் படைப்புகளை படைத்து வருகிறேன். எக்ஸ்னோரா என்னும் அமைப்பில் உலகச் சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரிகள், பள்ளிகளில் சொற்பொழிவு ஆற்றி வருகிறேன். துபாய் நகைச்சுவை மன்றம் போன்ற பல நகைச்சுவை மன்றங்களில். அம்பத்தூர் சிரிப்பரங்கம் போன்ற அரங்குகளில் நகைச்சுவையாக உரையாற்றி இருக்கிறேன். 24 மணி நேரம் இடைவிடாது நடிக்கும் நாடகத்தில் (லிம்கா ரெகார்ட்) பங்கெடுத்து நடித்திருக்கிறேன் தற்போது சுமார் 10 வருடங்களாக இணைய உலகில் சுமார் 30 இணைய குழுமங்களில் கதைகள்,கட்டுரைகள்,நவீனங்கள், கவிதைகள் எழுதி வருகிறேன். விருதுகள்: வல்லமை இதழில் ,யூத்புல் விகடனில், சென்னை ஆன் லைன்,ஓ எம் ஆர் எக்ஸ்ப்ரஸ் , மழலைகள், மின் தமிழ் போன்றவற்றில் சிறந்த படைப்பிற்கான பரிசு பெற்றுள்ளேன் . மற்றும் என் படைப்பான “வெற்றிச் சக்கரம்” “ தங்கத் தாமரை “ மனமென்னும் ‘ மந்திரச் சொல் “ எனும் மூன்று புத்தகங்களை மணிவாசகர் பதிப்பகத்தார் வெளியிட்டனர். அவற்றில் வெற்றிச் சக்கரம், தங்கத் தாமரை இரண்டு புத்தகங்களை noolini .com நூலினி தளத்தின் வாயிலாக இ புத்தகமாக வெளியிட்டுள்ளேன். இலவசமாக தரவிறக்கிப் படிக்க மாசிலாமணீஸ்வரர் கொடியிடைநாயகி ஆலையம் எனும் இ-புத்தகத்தை freetamilebooks.com தளத்தின் மூலமாக வெளியிட்டுள்ளேன் அன்புடன் தமிழ்த்தேனீ

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    26 ஜனவரி 2016
    அருமையாகவும், இனிமையாகவும் ஞயம்பட வரைந்திருக்கிறீர்கள். சுவைத்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி  
  • author
    27 டிசம்பர் 2020
    சூப்பர் சகோ
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    26 ஜனவரி 2016
    அருமையாகவும், இனிமையாகவும் ஞயம்பட வரைந்திருக்கிறீர்கள். சுவைத்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி  
  • author
    27 டிசம்பர் 2020
    சூப்பர் சகோ