நான் இலங்கை யாழ்ப்பாணம் குப்பிளான் என்ற கிராமத்தில் பிறந்தேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்தேன். பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் எமது கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கலை இலக்கிய மன்றம் ஒன்றை அமைத்து இலக்கிய செயற்பாடுகளில்
ஈடுபட்டேன்.அரச பாடசாலையில் ஆசிரியராக
சேவையாற்றினேன்.தற்போது எனது ஆவல் கலை
இலக்கிய செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடுவதாகும்.கலைஞர்களுடன் நட்புறவு கொள்வதற்கும், இலக்கிய செயற்பாடுகளில் பரஸ்பரம் உதவிகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஆவல். பிரதிலிபியில் எழுதும் எல்லாக் கலைஞர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு