வயது 72. மின்னணு பொறியியல் படித்து, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பற்பல நிலைகளில் பணி புரிந்து, தன்னார்வ ஓய்வு எடுத்துக் கொண்டேன். கடந்த 15 ஆண்டுகளாக உயர் கல்வியில் சேருவதற்கான தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன்.
தமிழ் இலக்கியத்திலும், வேத கணிதத்திலும் ஆர்வமுள்ளவன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து விளக்கி வருகிறேன். கதை, கட்டுரை, சிறார்க்கான பாடல் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
என்னுடைய முதல் கதை “தினமலர்-வாரமலர் 2020” சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது.
ரிப்போர்ட் தலைப்பு