pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

🌹வெள்ளி விழா!🌹

5
11

கதை கற்பனையே ! யாரையும் குறிப்பிடுவன அன்று ! இதையும் மீறி ஏதாவது யாருடைய மனதையேனும் காயப்படுத்துமானால் மன்னித்தருள வேண்டுகிறேன்! அடுத்தடுத்து அரசாங்க அதிகாரிகள் கொல்லப்படுகின்றனர். அதுவும் ஒரே ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

கதைகள் எல்லாம் கற்பனையே! இங்கு இடம் பெற்ற அத்தனை கதைகளிலும் வருகிற கதாபாத்திரங்கள் அத்தனையும் கற்பனையே! பரிமளா, ஐஸ்வர்யா, ஷ்ரத்தா, கமலி, அகிலா.... என இன்னும் வருகிற அத்தனை கதாபாத்திரங்களும் கற்பனையே! குறிப்பாக 'எஸ்விஆர்'னு வருகிற கதாபாத்திரமும் கற்பனைதான். இங்கு படைப்புகளில் 18 பிளஸ் போடப்பட்டுள்ளது, பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே. சில படைப்புகளில் 18 பிளஸ் கன்டென்ட் சிறிதும் இல்லாமல் கூட இருக்கும் பாஸ்!. அதற்காக மன்னித்தருள வேண்டுகிறேன். Don't judge a book by its cover. "நல்லது செய்யுறதுக்குக் கூட முகமூடி போட வேண்டியிருக்குதுங்களே பாஸ்! என்னங்க பண்றது? இல்லேன்னா காமெடியா இருந்தாலும் நம்ம படைப்புகளை வாசிக்க வர மாட்டேங்குறாங்க பாஸ்! அதான்!" என் பேரு எஸ்.வி.ரங்கநாதன். எனக்கு இன்னொரு பேரும் இருக்குது! 💖 எஸ்.வி.ஆர்-னு 💖 💖 எஸ்.வி.ஆர்!💖 (ஆமாம்! இவரு பெரிய பாட்ஷா! பம்பாயில பெரிய தாதாவா இருந்தவரு! "எனக்கு இன்னொரு பேரும் இருக்குது!"ன்னு கிளம்பிடுவாப்புல!) "அதென்ன எஸ்விஆர்?"னு இந்தப் பயகிட்ட கேட்டுப் பாருங்களேன். "மக்கள்திலகம் எம்ஜிஆர் சார் மாதிரி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்டிஆர் சார் மாதிரி, அஷ்டவதானி டி ஆர் சார் மாதிரி, ஜூனியர் என்டிஆர் சார் மாதிரி, லிட்டில் சூப்பர் ஸ்டார் எஸ்டிஆர் சார் மாதிரி பெருசா வரணுமில்லைங்களா பாஸ்! அதான்"னு நா கூசாமச் சொல்லுவான் பாஸ்! கெட்டப் பய பாஸ்!; இந்த எஸ்விஆர்!!" (இல்லீங்க! நம்பிடாதீங்க பாஸ்! நான் ரொம்ப நல்ல பையன் பாஸ்!) "ஏன்டா இப்படி எழுதி எங்களைக் கழுத்தறுக்கிறே?-"ன்னு கேட்டுப் பாருங்களேன்! "நாலு பேருக்கு நல்லது செய்யணுமில்லைங்களா பாஸ்? என் எழுத்து நாலு கோடி பேரையோ நாற்பது கோடி பேரையோ சிரிக்க வைக்கும்னா அது தப்பில்லை பாஸ்!"னு நாயகன் டயலாக்கை உல்டா பண்ணிச் சொல்லுவானுங்க. (பேசுறப்ப "நாயகன்" தீம் மியூசிக் வேற போடுற மாதிரி பேசுவான் பாஸ்!) இவனோட தொல்லை தாங்க முடியாம உருட்டுக்கட்டை கும்பல் கூட வந்தாங்க. அவங்ககிட்ட, "மன்னிக்கறவன் பெரிய மனுசன்னு கமல் சார் விருமாண்டியில சொல்லியிருக்காரு பாஸ்? நீங்க பெரிய மனுசங்கதானே?" கேட்டான் பாருங்க. அடிக்க வந்தவங்க கூட "ஆமாம்! ஆமாம்! நாங்க பெரிய மனுசங்கதான் நீ ரொம்ப நல்லவன்டா! நீ ரொம்ப நல்லா வருவடா தம்பி !" அப்படின்னு கண்ணுல கண்ணீர் விட்டுட்டுப் போயிட்டாங்கன்னா பாத்துக்கிடுங்க பாஸ்! சரி இவன் தொல்லை தாங்கமுடியலையே!ன்னு வீச்சரிவா, கத்தி, கபடா கடப்பாரைன்னு ஆயுதங்களோட சம்பவம் பண்ண ரெளடிக் கும்பலை அனுப்பி வச்சா, வந்தவங்ககிட்ட, "நீதிடா! நேர்மைடா! உண்மைடா!..." ன்னு மூச்சுவிடாம மூணு பக்கத்து பஞ்ச் பேசினான் பாருங்க. வந்தவங்க காது பஞ்சராகிக், காலுல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு கொண்டு வந்த ஆயுதங்களைக் காலுக்கிட்டயே போட்டுட்டு "ஆளை விட்டா போதும்டா சாமி!"ன்னு அலறியடிச்சிட்டு டாடா சுமோவுல ஏறி டாடா காட்டிட்டுப் போயிட்டாங்கன்னா பாத்துக்கிடுங்க. இவனோட திருவிளையாடல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்னும் நிறைய இருக்குதுங்க பாஸ்! கூடிய சீக்கிரமாக, 🙏 "எஸ்விஆரின் திருவிளையாடல்கள்"🙏 னு எதுனா எழுதினாலும் எழுதுவான் பாருங்க. சரி காமெடி போதும். வேற சில உண்மைகளைப் பேசலாம் வாங்க பாஸ்! ******************************** Disclaimer:- இங்கு படைக்கப்படும் படைப்புகள் அத்தனையும் கற்பனையே! கதாபாத்திரங்கள் அத்தனையும் கற்பனையே! இந்தப் படைப்புகள் யாருடைய மனதையேனும் எவ்விதத்திலாவது வருத்தமடைய வைப்பதாய் (என்னையுமறியாமல்) அமைந்துவிட்டால் அதற்காக "எங்க வீட்டுப்பிள்ளை"யாக "உங்க வீட்டுப்பிள்ளை"யாக " நம்ம வீட்டுப்பிள்ளை"யாக நினைச்சு மன்னித்தருள வேண்டுகிறேன். அத்துடன் பல படைப்புகளில் adults only 🔞 போட்டிருந்தாலும் மோசமாக எல்லாம் எல்லை மீறி எழுதியிருக்கமாட்டேன். அத்தோடு சில படைப்புகளில் adults only number 🔞 கன்டெட்டும் இல்லாமல் கூட இருக்குமுங்க. அப்பவாவது பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகட்டும்னு சும்மா போடப்பட்டதாகவும் இருக்குமுங்க. அதுக்காகவும் மன்னித்தருள வேண்டுகிறேன். *I would like to thanks to the original owners for the images used here.🙏🙏🙏. *The images used here are irrelevant to the stories here. *The images used here belong to their respective original owners. If the original owners ask to delete the images, I am obliged to delete them immediately. *18 mentioned here in the stories is Just to increase the number of viewers only. Those stories will not contain Worse,obscene,objectionable & disgusting content. ******************************** ரெண்டு வருசமா பிரதிலிபிப் பைத்தியமாவே ஆகி இதிலேயே சுத்திக்கிட்டிருந்தாலும் பெருசா பார்வையாளர்கள் வரமாட்டேங்குறாங்க பாஸ்! எதனாலயா இருக்கும்? "அதுக்கெல்லாம் நல்லா எழுதணுமப்பா!" "ஓ அப்படி வேற ஒண்ணு இருக்குதுங்களா பாஸ்? என்னமோ போங்க பாஸ்?" காமெடியில்லாம கொஞ்சம் வாங்களேன் சீரியஸா பேசலாம். உன்னால காமெடியா இல்லாம பேசவே வராதுப்பா. வேணும்னா ட்ரை பண்ணிப் பாரு! எழுதும் ஆர்வம் அதிகமுள்ளவன். சினிமா இயக்குநராவது இலட்சியம். உலக நாயகன் கமல்ஹாசன் சார் அவர்களின் தீவிர ரசிகன். அவரது பேச்சுகள், சிந்தனைகள் அத்தனையையும் ரொம்ப நாளாகவே வியப்பாகவே பார்க்கிறேன். அந்த வியப்பு கூடுகிறதே தவிர எப்போதும் குறைய வாய்ப்பே இல்லை. இயக்குநர்களில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சார், உலகநாயகன் கமல்ஹாசன் சார், திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் சார், விக்ரமன் சார் இயக்குநர் இமயம்பாரதிராஜா சார், பாலுமகேந்திரா சார், மகேந்திரன் சார் , மணிரத்னம் சார், ஸ்ரீதர் சார் , பாசில் சார், விசு சார், ஆர்.பார்த்திபன்சார், கே.எஸ். ரவிகுமார் சார், ஷங்கர் சார், சுரேஷ் கிருஷ்ணா சார், வசந்த் சார், சேரன் சார், தங்கர்பச்சான் சார், அகத்தியன் சார், நாம் தமிழர் அண்ணன் சீமான் சார், லிங்குசாமி சார், ஏ.ஆர்.முருகதாஸ் சார், வசந்தபாலன் சார், பாலா சார், வெற்றிமாறன் சார், சித்திக் சார், அமீர் சார், சொல்லாமலே சசி சார், சுந்தர் சி சார், சசிகுமார் சார் , சமுத்திரக்கனி சார்......(லிஸ்ட்பெருசுங்க பாஸ்!) போன்றோரின் படைப்புகள் மிகவும் விருப்பம். எழுத்தில் கண்ணதாசன் சார், ஜெயகாந்தன் சார், சுஜாதா சார், பாலகுமாரன் சார் , ராஜேஷ்குமார் சார், வைரமுத்து சார், அனுராதாரமணன் மேடம் , தேவிபாலா சார், பட்டுக்கோட்டை பிரபாகர் சார் போன்றோரின் படைப்புகள் சிலவற்றை வாசித்துள்ளேன். இன்னும் பொன்னியின் செல்வன் நாவலை முழுவதுமாக வாசித்ததே இல்லைங்க. நேரமே கிடைக்கமாட்டேங்குதே பாஸ்! பின்குறிப்பு:- இங்கு படைக்கப்படும் படைப்புகளில் பயன்படுத்தப்படும் படங்கள்(photos) அந்தந்த ஒரிஜினல் ஓனர்களுக்கே சொந்தமானவை.அந்தப் படங்களை எவ்வித வியாபார நோக்கத்ததிற்காகவும் பயன்படுத்தவில்லை. தவறாகவும் பயன்படுத்தமாட்டேன். உறுதியுடன் கூறுகிறேன்.அந்தச் சம்பந்தப்பட்ட ஒரிஜினல் ஓனர்கள் படங்களை நீக்கச் சொல்லிக் கேட்டால்,உடனடியாக நீக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அந்தப் புகைப்படங்களுக்காக அவர்களுக்குக் கோடானுகோடி நன்றிகள் சொல்லவும் கடமைப்பட்டவனாகிறேன்🙏🙏🙏. இங்கு படைக்கப்படும் படைப்புகள் அனைத்தும் காப்புரிமை பெற்றவை. இங்கு படைக்கப்படும் படைப்புகளை எனது அனுமதியில்லாமல் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் அது சட்டத்தின் படி குற்றம். அத்துடன் நியாயத்தின் படி பாவமும்‌ கூட! சிந்தியுங்கள் நண்பர்களே! உங்களாலும் இங்குப் படைக்கப்பட்ட எனது படைப்புகளைக் காட்டிலும் சிறப்பாக எழுத முடியும். எஸ்விஆராலேயே இம்புட்டு எழுத முடியும்னா சிந்தியுங்க உங்களாலும் எம்புட்டோ எழுத முடியுமுங்க நண்பர்களே! யோசிங்க! யோசிங்க! ( மனசாட்சி:-டேய் டேய் போதும்டா.நீ என்னவோ சிறப்பா எழுதிட்ட மாதிரி சொல்லுற.ஏன் இந்த வேண்டாத வேலை? நீ என்னவோ "காதல் கோட்டை" மாதிரி கதை எழுதின மாதிரியும் உன் கதையப் படமா எடுக்க நிறையப் பேரு முயற்சிச் செய்யுற மாதிரியும் ரொம்ப அலட்டிக்கறியே?)

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Vennila
    05 ஜூலை 2025
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
  • author
    TMC vasudevan
    05 ஜூலை 2025
    good pathivu
  • author
    Vasanthi Rama
    05 ஜூலை 2025
    அருமையான கதை அம்சம் 👌சூப்பர் தல 👌👌👌காலை வணக்கம் 🙏
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Vennila
    05 ஜூலை 2025
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
  • author
    TMC vasudevan
    05 ஜூலை 2025
    good pathivu
  • author
    Vasanthi Rama
    05 ஜூலை 2025
    அருமையான கதை அம்சம் 👌சூப்பர் தல 👌👌👌காலை வணக்கம் 🙏