எனது முதல் வகுப்பு ஆசிரியர் அமரர் இரா.பொன்னுசாமி அவர்களின் கலை இலக்கிய ஈடுபாடும் நாடக த்தின் சேர்ந்து நடிப்பதுமே இளவயது கலை
ஆர்வமாகவே இருந்தது.
நான்காம் வகுப்பு ஆசிரியர்
திரு.சி.பிரசன்ன வெங்கடாசலம் அவர்களின் புலமை மற்றும் அறிவுரையே படிப்பில் எனது ஆர்வம்
திரும்பக்காரணமாக மாறியது. பத்தாம்
வகுப்பு வரை ஆங்கிலப்புத்தகங்கள்
மற்றும் இலக்கணப்புத்தகங்கள்வாங்கி
கொடுப்பது. ஒன்றாகப் படிக்கிறேனா? '|
என்று கூர்ந்தாய்வு செய்வது.
ஆறாம் வகுப்பு ஆசிரியை திருமதி வளர்க்கொடி அவர்களின் அதிக
ஈடுபாடும், பள்ளி பிள்ளைகளின் முன்
னேற்ற மே தனது வாழ்க்கையாகக்
கொண்டவர்கள். மேலும் பாசமிகு கணித ஆசிரியர் திரு.G.பிலவேந்திரன்
BSC Bed அவர்கள் எளிமையும் , அறிவுரையும் இன்றுவரை என்னை
வழி நடத்தி வருகின்றது. ஏழாம் வகுப்பு
படிக்கும் போது அய்யா கலைஞர் அவர்களின் "குறளோவியம்" தொடர்ந்து
படிப்பேன். "சங்கத்தமிழ் " படித்துபடித்து
இரசித்து மயங்கி க் கிடந்ததும் உண்டு.
தேன் உண்ட வண்டாகத் தமிழ் படித்து
வாழ்ந்தேன். வறுமை என்னை வாட்ட,
தமிழ்ப் புலமை தள்ளிப் போக ச் செய்ய
இலக்கற்று வாழ்க்கை நூலறுந்த
பட்டமாய் இயங்கியது.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு