பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே புலரும் காலைப் பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ இரவும் விடிய வில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே……. ஏமி ஜாக்ஸன் ஏனோ சுந்தருக்கு ஜாக்கியாய்த் தெரிந்தாள். மனம் படத்தில் லயிக்காமல் பின்னோக்கி நழுவியது. ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஜாக்குலினைத் தான் முதன்முதலாய்ப் பார்த்து வாய் பிளந்த காட்சி மனத்திரையில் ...