<p>வ. ராமசாமி அய்யங்கார் (வ. ரா) (1889 – செப்டெம்பர் 17, 1951, தமிழ்நாடு) தமிழ் வசனநடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய ஒரு முன்னோடி ஆவார். தஞ்சை மாட்டம் திருவையாற்றுக்குப் பக்கத்தில் உள்ள திங்களூரைச் சேர்ந்த இவரின் பெற்றோர் வரதராஜ அய்யங்கார், பொன்னம்மாள் தம்பதியினர் ஆவர்.1910ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டது முதல் விடுதலை இயக்கத்தில் வ.ரா. தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். காந்தியடிகள் மீது அளவற்ற பற்றுக் கொண்டவராகத் திகழ்ந்தார். இந்தியர்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது மூடப்பழக்க வழக்கங்களே என்று முழுமையாக நம்பினார். அதனால் அதனை எதிர்த்துப் போராடுவதில் வ.ரா. முனைந்து நின்றார். வ.ரா. வைதீக வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவர். தன் குல ஆசாரங்களைக் கைவிட்டார். பூணூல் போடுவதில்லை; குடுமி யை நீக்கிக் கொண்டார். பெற்றோர், உற்றார், சகோதரர் ஆகிய உறவுகளைத் துறந்தார். இலங்கையில் ஒரு பத்திரிகையில் பணியாற்றும் போது, புவனேஸ்வரி அம்மையாரை மணந்து கொண்டார். வ. ராமசாமி ஒரு முற்போக்குச் சிந்தனையாளராகவும் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரராகவும் விளங்கினார். அறிஞர் அண்ணா தமது திராவிடநாடு பத்திரிகையில் வ.ராவைப் பற்றி எழுதுகையில் ” அக்கிரகாரத்து அதிசய மனிதர் ” என்று வருணித்தார் .</p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு