அன்புள்ள எழுத்தாளர்களுக்கு வணக்கம்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரதிலிபி நடத்திய சிறுகதைப் போட்டி 'கார்கால மேகமே'. மழைக்காலமும் அதற்கேற்ற தலைப்புமாக நம் எழுத்தளார்களை கற்பனையிலும் மலரும் நினைவுகளிலும் ஆழ்த்தியிருக்கிறது இப்போட்டி என்று போட்டிக்கு வந்த நூற்றுக்கணக்கான படைப்புகளில் இருந்து தெரிகிறது.
இத்தனை கதைகளில் ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு முடிவுக்கு வருவதென்பது சற்றே கடினமான காரியம். படைப்பினை வாசிக்க வைக்கும் தன்மை, நல்லதொரு கதைக் கரு, எழுத்து நடையழகு, சிறப்பான வசனங்கள், சிறப்பான வர்ணனைகள், பிரச்சினைக்கான நடைமுறைத் தீர்வு, சிந்தனைக்கு ஒரு ஊக்கம் இந்த காரணிகளின் அடிப்படையில் கதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்குமே பிரதிலிபியின் மனமார்ந்த நன்றிகள். நமது எழுத்தாளர்களை அவர்களின் அர்ப்பணிப்புக்கும், எழுத்தார்வத்துக்கும், வெற்றிக்கும் மனமார வாழ்த்துகிறோம்.
பிரத்யேகமான முறையில் பிரேம் செய்யப்பட்ட வெற்றிசான்றிதழ் முதல் வெற்றியாளரின் வீட்டு முகவரிக்கே அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். முதல் 3 வெற்றியாளர்களின் எழுத்து வடிவ நேர்காணல்கள் விரைவில் பிரதிலிபியில் வெளியிடப்படும். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் இரண்டு வாரங்களுக்குள் மின்-சான்றிதழ் வழங்கப்படும்.
வெற்றி பெற்றவர்களுக்கு நம் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.
நன்றி.