- எழுத்தாளர்களின் நேர்காணல்கள் - எழுத்து சவால்04 பிப்ரவரி 2025வணக்கம், பிரதிலிபி நடத்தியபடைப்பாளிகள் எழுத்து சவால் போட்டியில்குறைந்தபட்சம் 80+ பாகங்கள் எழுதி முடிக்கும் எழுத்தாளர்கள், அவர்களின் நேர்காணல் மற்றும் ப்ரொபைல் பக்கத்தை மொத்த பிரதிலிபி குடும்பத்தோடு பகிரும் வாய்ப்பை பெறுவார்கள்!" என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி எழுத்தாளர்களின் நேர்காணல்களை கீழே பார்க்கலாம். இந்த நேர்காணல் மூலம் வளரும் எழுத்தாளர்களுக்கு குறிப்புகள், யோசனைகள், தங்களின் எழுத்துமுறை மற்றும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்ட எழுத்தாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. எழுத்தாளர் தமிழ் காதலி அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/1nzhydtwunuf எழுத்தாளர் மானஸ் அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/hutlwr1ul5rn எழுத்தாளர் விண்மீன் விழியழகி அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/rdqopiwowccu நன்றி.மேலும் பார்க்க
- எழுத்தாளர்களின் நேர்காணல்கள்31 ஜனவரி 2025வணக்கம், பிரதிலிபி நடத்திய சிறந்த எழுத்தாளர் விருதுகள் 8 போட்டியில் "குறைந்தபட்சம் 120 பாகங்கள் எழுதி முடிக்கும் எழுத்தாளர்கள், அவர்களின் நேர்காணல் மற்றும் ப்ரொபைல் பக்கத்தை மொத்த பிரதிலிபி குடும்பத்தோடு பகிரும் வாய்ப்பை பெறுவார்கள்!" என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி எழுத்தாளர்களின் நேர்காணல்களை கீழே பார்க்கலாம். இந்த நேர்காணல் மூலம் வளரும் எழுத்தாளர்களுக்கு குறிப்புகள், யோசனைகள், தங்களின் எழுத்துமுறை மற்றும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்ட எழுத்தாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. எழுத்தாளர் நீளா தேவிஅவர்களின்நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/hwiybfs8me7g எழுத்தாளர்செங்கை மனோ மணி (வி.எம்.எம்.)அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/jwjxmidic2oa எழுத்தாளர்தனக்யா கார்த்திக் அவர்களின் நேர்காணல் - https://tamil.pratilipi.com/story/lwi51ilmxcyn எழுத்தாளர்𝓿𝓲𝓳𝓲 𝓟𝓻𝓲𝓰𝓪 அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/ochqbkwis5yu எழுத்தாளர்சீமா அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/retw2fj6xjsl எழுத்தாளர்தமிழ் காதலிஅவர்களின் நேர்காணல் - https://tamil.pratilipi.com/story/khauu5hdsco7 எழுத்தாளர்𝐆𝐈𝐆𝐀 𝐁𝐘𝐓𝐄 fantasy ஸ்டோர்அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/jgqe6ar1riuq எழுத்தாளர்சுவாதிகா கணேசன்அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/eqnmm06qegbw எழுத்தாளர்உஷா ரமேஷ்அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/auin4tcvimqg எழுத்தாளர்விண்மீன் விழியழகிஅவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/y33gfcdydhol எழுத்தாளர்S Bஅவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/qoqbij5tfdnb எழுத்தாளர் Uma Saravananஅவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/v5rfyubs7zt7 எழுத்தாளர்Artista மனோஅவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/v9jxuvdnkhhc எழுத்தாளர்மீனாட்சி ராஜேந்திரன்அவர்களின் நேர்காணல் - https://tamil.pratilipi.com/story/jnzbdn3zxm0t எழுத்தாளர்வெங்கட் பிரசாத்அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/wt6xjeguap4p எழுத்தாளர் பிருந்தா அவர்களின் நேர்காணல் -https://tamil.pratilipi.com/story/axpcfrhcoo9d நன்றி.மேலும் பார்க்க
- சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 8 போட்டி முடிவுகள்17 டிசம்பர் 2024பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 8 போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எழுத்தாளர்கள் போட்டியில் பங்கேற்று சிறந்த காதல் கதைகள், விறுவிறுப்பான த்ரில்லர் கதைகள், திகில் மற்றும் மர்மக் கதைகள், சமூக கருத்துக்கள் கொண்ட பெண்மைய கதைகள் என பல வகைகளில் கதைகள் எழுதியிருந்தார்கள். போட்டிக்கு வந்த அனைத்து கதைகளுமே சுவாரஸ்யமானவை மற்றும் தனித்துவமானவை. போட்டியில் கலந்துகொண்டு 80+ பாகம் கொண்ட கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள்! பெரும் போட்டிக்கு மத்தியில் வாசகர் தேர்வு மற்றும் நடுவர் தேர்வு ஆகியவற்றில் தேர்வாகி வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தேர்வு செய்த அடிப்படை : தொடர் கதைகளை மதிப்பிடும் போது நடுவர்களால் பல முக்கிய காரணிகள் பரிசீலிக்கப்பட்டன. கதையின் தீம், எழுதும் நடை, கதைக்களம், கதையின் அமைப்பு, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நாவலின் போது கதாபாத்திரங்களின் வளர்ச்சி, உரையாடலின் முக்கியத்துவம், வாசிப்பில் ஆர்வத்தைத் தக்கவைக்க பொதுவான இலக்கணம், எழுத்துப்பிழைகள் முதலியன. குறிப்பு: கீழே குறிப்பிட்டுள்ள வெற்றியாளர்களில் பணப்பரிசு பெறும் அனைவரும் பிரதிலிபியின் [email protected] எனும் ஈமெயிலில் இருந்து இன்றே மின்னஞ்சல் பெறுவார்கள். அதனை நிரப்பி பரிசை பெற்றுக் கொள்ளவும். ₹5000 ரொக்கப்பரிசு + மின்னஞ்சலில் வெற்றியாளர் சான்றிதழ் + வீட்டு முகவரிக்கு சிறப்பு பரிசு பெரும் வெற்றியாளர்கள்: --விண்மீன் விழியழகி - கருப்பியின் அரக்கன் இவனோ?? --வெங்கட் பிரசாத் - இறுதி யுகம் --வெண்பா பூங்குழலி - ஊழ்வினை பிராப்தம் --கணேஷ்வரன் - கர்ண கவசம் --Revathi Selvam - மர்ம தேசம்.1.😱💀👻👻 ₹3000 ரொக்கப்பரிசு + மின்னஞ்சலில் வெற்றியாளர் சான்றிதழ் + வீட்டு முகவரிக்கு சிறப்பு பரிசு பெரும் வெற்றியாளர்கள்: --🐅𝓿𝓲𝓳𝓲 𝓟𝓻𝓲𝓰𝓪🐅🐅 - மன்னித்து ஏற்பாயா??? என்னை --Shyamala - விரகதாபம் கொண்டேனடா --கவிநிலா - 1. நீ உறவாக ஆசை💞 --தஸ்லிம் - விழியிலே ஒரு கீறலே --ஸ்ரீ - புயலுக்குள் தென்றலாய்... ₹1000 ரொக்கப்பரிசு + மின்னஞ்சலில் வெற்றியாளர் சான்றிதழ் + வீட்டு முகவரிக்கு சிறப்பு பரிசு பெரும் வெற்றியாளர்கள்: --Artista மனோ - புவியில் ஓர் வேற்றுலகம் (குமரிக்கண்டம் என்னும் மறைந்த இரகசியம்) --தனக்யா கார்த்திக் - நீள்வதேனடி நின் கதங்களே... --L Leelavathi - ❤️🔥 எனை கொல்லும் ராட்சஷனே ❤️🔥 --லதா - 💘 தேடியவன் கைகளிலே 💖 தேவதையாய் விழுந்தாளா 💘💖 --இயற்கை காதலி - ராவணனின் காதல் மலரோவியம் இவளோ --Mahendran Vaishnavi - என்னுயிராக வந்தவளே 💕💕 --அனு சத்யா - உன் அன்பில் தொலைந்தேனடி 💖 1 --சங்கரேஸ்வரி - 🔥 மோகத்தீ அணையுமாடி 🔥 --💕கவி மகிழினி 💕 - 1:வரமாய் கிடைத்த சாபம் நீயடா 🫂 --காஞ்சனா அன்புச்செல்வம் - உன் மன்னவனாக நான் வரவா?? மின்னஞ்சலில் வெற்றியாளர் சான்றிதழ் பெரும் எழுத்தாளர்கள் (சிறப்பு குறிப்பு) : நி வே ரா - கள்ளச்சி லீலா சந்தர் சந்தர் - காதல் 🔱சித்திரம் கயல்விழியாழ் - என்னை ஆளும் அகத்தியனே வேலையா கார்த்திகேயன் - பைரவ்நாத் Satha 💛 - விழியின் வழியே S Gowri Kala - என் முன்னால் காதலே...❤️❤️❤️ உஷா ரமேஷ் - நீ பாதி. நான் பாதி சித்ரவதனா - ஹாட் - ட்ரிக் Sindy 📝நாவல் - தி கிராண்ட் மாஸ்டர் ஆஃப் மெடிசின் ( The Grandmaster of Medicine) ❤️❤️ painful story... Pandeeswari Thiyagarajan - 1.மனம் இணைய வா மணாளனே! Vijayalakshimi😍 Vinayagamoorthi 🤗 - அக்னி சிறகே... 🔥 புவனா சந்திரசேகரன் - திரிகடுகம் அ ஐஸ்வர்யா - அடக்கி ஆள வந்தவன்..!❤️ Priya Pandees - வாகீஸ்வரனின் நங்கை அவள் ✒️இலட்சுமிமாதவி𝓛𝓪𝓴𝓼𝓱𝓶𝓲𝓶𝓪𝓭𝓱𝓪𝓿𝓲 - 1- உன்னுள் கலந்திடவே காத்திருக்கேன்..!❤️🔥 தமிழ் காதலி✒️✒️ - தாழ் திறவாயோ மனமே...(முழுத்தொகுப்பு) R J - ரகசிய ராட்சசனே! (அவனதிகாரம் - பார்ட் 2) (முடிவுற்றது) கனிமொழி மகேஷ் - 🩶முல்லைக்குத் தேரானான்🤍 (முடிந்தது) Daisy Josephraj - ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி Manivannan Saravanan - நீயே என் இதயராகம் Sudha Suresh - கலாட்டா கல்யாணம் (வேண்டுமடி நீ எனக்கு சீசன் -3) Nivi Ammu - மூர்க்கனின் மூச்சுக்காற்றாய் நீ...!! சீமா - ஆர்கலியில் விழுந்த ஆலியிவன் Kani Mozhi - ராட்ஷசனின் சதியே ❤️❤️ ( முடிந்தது ) ஷக்தி நதி - காதலே கனவாக கலைந்திடுமா விஜய் தமிழ் - அசோGUN ' 🌹 ரோஸ்🌹 Jailani 🌹 - 😍💖❣என் கனவில் நீதானடி❣💖😍 சி வே முத்துச்செழியன் - கான்யகுப்ச காந்தருவன் Sangeetha Velu - ஆகாஷ கங்கா 💧 (முழு தொகுப்பு) ஆபுத்திரன் - மா துஜே சலாம் Mithila Mahadev - சஹானா சாரல் தூவுதோ...01 120 பாகம் எழுதி நேர்காணல் கொடுக்கப்போகும் எழுத்தாளர்கள் : Artista மனோ - புவியில் ஓர் வேற்றுலகம் (குமரிக்கண்டம் என்னும் மறைந்த இரகசியம்) 🐅𝓿𝓲𝓳𝓲 𝓟𝓻𝓲𝓰𝓪🐅🐅 - மன்னித்து ஏற்பாயா??? என்னை லீலா சந்தர் சந்தர் - காதல் 🔱சித்திரம் கனவுகளின் தோழி தோழி - நிழலை தேடும் பாவை 🩶🩶 செங்கை மனோ மணி வி எம் எம் - 1) 🙏💙அமுதசுரபி💖🙏 Satha 💛 - விழியின் வழியே உஷா ரமேஷ் - நீ பாதி. நான் பாதி சித்ரவதனா - ஹாட் - ட்ரிக் தனக்யா கார்த்திக் - நீள்வதேனடி நின் கதங்களே... Vijayalakshimi😍 Vinayagamoorthi 🤗 - அக்னி சிறகே... 🔥 Meenakshi Rajendran - நின் வழியில் என் பயணம். பாலமணி வி - நான் பெற்றிடாத கண்ணன் 👶👩👦💕 கணேஷ்வரன் - கர்ண கவசம் ✔️𝐆𝐈𝐆𝐀 𝐁𝐘𝐓𝐄 Fantasy ஸ்டோர் 💞 - ஒரு நட்பு, ஒரு காதல், ஒரு நட்சத்திரம் வெங்கட் பிரசாத் - இறுதி யுகம் தமிழ் காதலி✒️✒️ - தாழ் திறவாயோ மனமே...(முழுத்தொகுப்பு) R J - ரகசிய ராட்சசனே! (அவனதிகாரம் - பார்ட் 2) (முடிவுற்றது) கனிமொழி மகேஷ் - 🩶முல்லைக்குத் தேரானான்🤍 (முடிந்தது) Uma Saravanan - ❣️உன்னில் உறையத்தான் உயிரோடிருக்கின்றேன் 🌹🌹ராஜி🌹🌹 - அன்றில் பெண்ணே வா (முடிந்தது) சீமா - ஆர்கலியில் விழுந்த ஆலியிவன் தஸ்லிம் - விழியிலே ஒரு கீறலே S B - கொடு எனையே நான் உந்தன் துணையே.... Kani Mozhi - ராட்ஷசனின் சதியே ❤️❤️ ( முடிந்தது ) Sangi Krish - அவளின் ரகசியம் விண்மீன் விழியழகி - கருப்பியின் அரக்கன் இவனோ??(முடிந்தது) கவியின் காதலன் - வரமாய்வந்தவளே(னே)-1 சுவாதிகா கணேசன் - நான் - அவள் - அவன் 🔥 - 1 Brintha - தெய்வம் தந்த வீடு Sangeetha Velu - ஆகாஷ கங்கா 💧 (முழு தொகுப்பு) ஸ்ரீ - புயலுக்குள் தென்றலாய்... காஞ்சனா அன்புச்செல்வம் - உன் மன்னவனாக நான் வரவா?? முதல்முறையாக 80 பாக தொடர் எழுதி மின்னஞ்சலில் பிரதிலிபியிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ் பெரும் எழுத்தாளர்கள் : நி வே ரா - கள்ளச்சி 🐅𝓿𝓲𝓳𝓲 𝓟𝓻𝓲𝓰𝓪🐅🐅 - மன்னித்து ஏற்பாயா??? என்னை Meenakshi Ganeshan - ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி (தொடர் 1) லீலா சந்தர் சந்தர் - காதல் 🔱சித்திரம் தனலட்சுமி ஞானசேகரன் - 💙நெய்தலின் நீலாம்பல் 🌷 Shyamala - விரகதாபம் கொண்டேனடா கவிநிலா - 1. நீ உறவாக ஆசை💞 வேலையா கார்த்திகேயன் - பைரவ்நாத் Sowbarnika Nedumaran - லகோரி ஜானு💜💜💜 Crazy Writer📝📝📝 - 💜கூடலில் பிறந்த காதல்✨💓💘 Revathy Pitchai - சத்ய(யாவின்) சோதனை! Saranya Ayyanar 💞 - மழை நின்ற பின்பும் தூறல்...💦💦(முடிந்தது) Revathi Selvam - மர்ம தேசம்.1.😱💀👻👻 ❣️திவ்ய பாரதி❣️ - ❗வில்ல(அ)ங்கனோ❗ மாயத்தூரிகை࿐ - இமைகளும் உதடுகள் ஆகுமோ ? (முடிந்தது) காயத்ரி தேவி - உனக்குள்ளே தேடு (முடிந்தது) Govind Raj - பூமி உனக்கான ரோஜா(நிறைவு பகுதி) ப்ரியா - மனதை திருடி(அ)யவள் Theepa - முரடன் மயங்கிய முழு மதி அவள்.. ❤️❤️.part -1 இராஜேந்திரன் - நெஞ்சுக்குள் பெயர் எழுதி நிஷா நாயகன் - கால் பாய்ஸ் {விபச்சாரன்கள்} Sindy 📝நாவல் - தி கிராண்ட் மாஸ்டர் ஆஃப் மெடிசின் ( The Grandmaster of Medicine) ❤️❤️ painful story... R Lakshmy - 💜நொடி நேர மின்னல்கள்💜 புவனா சந்திரசேகரன் - திரிகடுகம் Meenakshi Rajendran - நின் வழியில் என் பயணம். Gowthami Karthikeyan - கனவில் கண்ட வானவில்லே!!! கைத் தொட வருவாயா??? அ ஐஸ்வர்யா - அடக்கி ஆள வந்தவன்..!❤️ பாலமணி வி - நான் பெற்றிடாத கண்ணன் 👶👩👦💕 யதுமுனி - இவர்கள் சந்தித்தால் (முழுத்தொகுப்பு) ✔️𝐆𝐈𝐆𝐀 𝐁𝐘𝐓𝐄 Fantasy ஸ்டோர் 💞 - ஒரு நட்பு, ஒரு காதல், ஒரு நட்சத்திரம் வெங்கட் பிரசாத் - இறுதி யுகம் Karuppiah Rajesh - பொன்னி நதி லதா - 💘 தேடியவன் கைகளிலே 💖 தேவதையாய் விழுந்தாளா 💘💖 Sudha Suresh - கலாட்டா கல்யாணம் (வேண்டுமடி நீ எனக்கு சீசன் -3) Kavitha - உறவுகள் பலவிதம் சக்தி பிரியா மிரா - உன் பார்வை ஒரு வரம்..... 1 💗💗 இயற்கை காதலி - ராவணனின் காதல் மலரோவியம் இவளோ Shahiabi - கோடை (யின்) மழை 🌦️ - 1 Adhipan Adhipan - தந்தையின் ஆசான் அச்சிறுவன் !!!!! Poornimakarthik - எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி! ஸ்வீட் நிவி - காதலா காதலா பூவும் பூயலும் சக்தி லீலா சந்தர் - மீண்டும் 🔱வந்தேன் கலையரசி கரிகாலன் - (முடிந்தது) காட் டிசைட்ஸ் சம்திங்❤️( God Decides something) கவியின் காதலன் - வரமாய்வந்தவளே(னே)-1 சுவாதிகா கணேசன் - நான் - அவள் - அவன் 🔥 - 1 ஆர் சத்திய நாராயணன் ராமமூர்த்தி - உஷ்...! ( பாகம் - 01) ✍️ தமிழ் பிரியா ✍️ - என் கர்வம் கலைத்த காதல் நீ(முடிந்தது) ரம்யா அம்மு - சிற்றின்பத் தேன் நிலவே 👸💕 the sweet poison ❤️🔥 Brintha - தெய்வம் தந்த வீடு Nilani 🌹Nilani 😎 - 💕மனசுக்கேத்த பொண்ணு 🌟 Lilly Put - மறுமுறை உன்னை சந்திப்பேனா💖 வெற்றியாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பிரதிலிபி போட்டிக்குழுமேலும் பார்க்க
- பிரதிலிபி CEOவின் கடிதம்!13 செப்டம்பர் 2024வணக்கம், பத்து ஆண்டுகளுக்கு முன், 14 செப்டம்பர் 2014ஆம் தேதி நாங்கள் பிரதிலிபி தளத்தைத் தொடங்கினோம். அந்நேரத்தில், எங்களிடம் பல கேள்விகள் முளைத்தன, ஆனால் ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் வலுவாக இருந்தது. கனவுகளுக்கு மொழியும், இருப்பிடமும் தடைகளாக இருக்கக்கூடாது. படைப்பாளிகள் தங்கள் கதைகளை உலகின் பிற பகுதிகளுடன் எந்தத் தடையும் இல்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் உறுதியோடு இருந்தோம். இப்பயணம் கடினமானதாய் இருக்கும் என்று யூகித்தோம் , அதே வேளையில் எங்கள் இலக்கை நெருங்கும்போது அதற்கான பலனை எங்களுடன் சேர்ந்து எங்கள் படைப்பாளிகள் அனைவரும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இது எவ்வளவு கடினமானது, அதே நேரத்தில் எத்தகைய அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது என்பதை எங்களால் அப்போது கற்பனை கூட செய்ய முடியவில்லை. உங்களின் கதைகள் மாதத்திற்கு நூறு வாசகர்களால் வாசிக்கப்பட்டு, எங்கள் பயணத்தில் நூறு வாசகர்கள் இணைந்திருக்கிறார்கள் என நாங்கள் கொண்டாடிய நாட்களை இத்தருணத்தில் எண்ணிப்பார்க்கிறோம். இப்போது லட்சக்கணக்கான எழுத்தாளர்கள்,வாசகர்களைக் கொண்ட குடும்பமாக இருக்கிறோம், கதைகள் லட்சக்கணக்கில் வாசிக்கப்படுகின்றன! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாங்கள் பணம் சம்பாதிக்கும் அம்சங்களைத் தொடங்கவில்லை. நீங்கள் அனைவரும் பிரதிலிபியில் தொடர்ந்து எழுதுகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் எழுதப்போகும் அடுத்த அத்தியாயத்திற்காக ஆர்வமுள்ள வாசகர்கள் காத்திருக்கிறார்கள். கடந்த மாதத்தில், அதே வாசகர்கள் தான் 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான ராயல்டியை நம் எழுத்தாளர்கள் பெற காரணமாய் அமைந்திருக்கிறார்கள். 18 எழுத்தாளர்கள் 1 லட்ச ரூபாய்க்கு அதிகமாகவும், 500க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் 5000க்கு ரூபாய்க்கு மேல் சம்பாத்தியம் ஈட்டவும் அவர்கள் உதவியிருக்கிறார்கள். பிரதிலிபிக்கு வெளியில் யாராவது நம் எழுத்தாளர்கள் மற்றும் அவர்கள் கதைகள் மீது கவனம் செலுத்துவார்களா என்றொரு கேள்வி முன்பு இருந்தது. ஆனால் நாங்கள் இப்போது பிரதிலிபி கதைகளிலிருந்து ஐந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், ஒரு வெப் சீரிஸையும் தயாரித்துள்ளோம், இன்னும் நிறைய வரயிருக்கின்றன! ஆனால் இந்தப் பயணம் எந்த வகையிலும் எளிமையானதாக இல்லை. உடலும், மனமும் துவண்டு , இந்த நாள் என்ன அதிர்ச்சியைத் தரப்போகிறது, என்னைச் சார்ந்தவர்களுக்கு என்ன ஆகும் என்ற பதற்றத்துடன் பல நாட்கள் கண் விழித்திருக்கிறேன். நிறுவனம் அத்தகைய கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்திருக்கிறது. அந்த இறுக்கமான நாட்களிலிருந்து எங்களை மீட்டது நீங்கள்தான். பல வருடங்களாக நீங்கள் எங்களிடம் காட்டும் நம்பிக்கையும், அன்பும் தான் ஒவ்வொரு நாளும் இப்பயணத்தில் எங்களை நிலைநிறுத்தின. நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்பது எங்களுக்குத் தெரியும். நம் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் தங்களது அனைத்து நிதித் தேவைகளையும் பிரதிலிபி ராயல்டியிலிருந்தே பூர்த்திசெய்துகொள்ளும் நிலையை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம். நமது கதைகள் உலகின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைய வேண்டும் என்பதே நம் இலக்கு. ஜே.கே. ரவுலிங்ஸ், ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின்ஸ் ஆகியோர் போல் உலகளவில் கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் உங்களிலிருந்து உருவாக வேண்டும் என விரும்புகிறோம்! மேல்நோக்கிய இப்பயணம் கடினமானது தான். ஆனால் நீங்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் தொடருவோம். எங்கள் முயற்சிகள் எங்களை கீழே தள்ளினாலும், உங்கள் அன்பினாலும், உங்கள் நம்பிக்கையினாலும், நாங்கள் மீண்டும் மேலே வருவோம். அனைவருக்கும் நன்றி! அன்புடன், ரஞ்சித் பிரதாப் சிங்.மேலும் பார்க்க
- எழுத்தாளர்களின் வெற்றிக் கதைகள்13 செப்டம்பர் 2024நம் எழுத்தாளர்களின் எழுத்துப் பயணம் சார்ந்த சில உணர்வுப்பூர்வமான தருணங்களை இங்கு பகிர்கிறோம் : 1. பிரதிலிபி எனும் அரவணைப்பு சில ஆண்டுளுக்கு முன் சங்கீதா ப்ரியா தன் தாயாரை புற்றுநோய்க்கு பறிகொடுத்தார். மிகுந்த மனச்சோர்வுற்ற அவர் காலம் எனும் சுமையைத் தளர்த்த, ஏதேச்சையாய் பிரதிலிபியில் கதைகள் படிப்பதிலும் எழுதுவதிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். எழுத்து அவரை அன்புடன் அரவணைக்கத் தொடங்கிய அதே வேளையில், அதிலிருந்து அவர் வருமானமும் ஈட்டத்தொடங்கினார். பிரதிலிபியை ஒரு ஆதரவுக் கரமாக நம்பும் அவர் பிரதிலிபியில் எழுதாமலும், படிக்காமலும் தன்னால் ஒரு நாளையும் கடத்த முடியாது என்கிறார். 2. வாழ்வை மாற்றிய கதைகள் எழுத்தாளர் செவ்வந்தி துரை, சிறுவயதில் டீக்கடைகளுக்கு வரும் நாளிதழ்கள் மூலம் வாசிப்பில் ஆர்வம் கொண்டார். பிற்காலத்தில் அவரே ஒரு வெற்றிகரமான எழுத்தாளராக மாறுவார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. தனது கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் அவர் இன்று பிரதிலிபி-தமிழில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராய் உருவெடுத்துள்ளார். பிரதிலிபியிலிருந்து பெறும் வருமானம் தன் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை நிகழ்த்திவருவதாக அவர் குறிப்பிடுகிறார். 3. உதவிக்கரம் நீட்டிய எழுத்தாளர்கள் அண்மையில் நிகழ்ந்த வயநாடு பேரழிவை நம்மால் எளிதில் மறக்க இயலாது. அதில் பாதிக்கப்பட்டோரின் நிவாரணத்திற்காக நம் பிரதிலிபி மலையாள எழுத்தாளர்கள் பலர் ஒன்றிணைந்து தங்களது ஒரு மாத பிரதிலிபி சம்பாத்தியத்தை நிவாரண நிதியாக அளித்தனர். எழுத்திலிருந்து பெற்ற வருமானம் மக்களின் துயர் துடைக்க பயன்பட்டதில் நாங்கள் மிகுந்த மனநிறைவு அடைந்தோம். 4. கனவுகளின் பயணம். திருமதி. கனாக்கிற்கு நீண்ட காலமாகவே ஓர் இரு சக்கர வாகனம் வாங்கவேண்டும் என்று கனவு இருந்தது. பிரதிலிபியிலிருந்து பெற்ற வருமானமே அதை சாத்தியம் ஆக்கியது. அவர் தன் அழகிய ஸ்கூட்டருக்கு "ராம்பியாரி" என்று பெயரிட்டார். மேலும் தன் மகிழ்ச்சியை அவர் தன்னை ஆதரிக்கும் வாசகர்களோடு பகிர்ந்துகொண்டார். கனாக்கின் கதை, அர்ப்பணிப்புடன் இருந்தால், கனவுகள் நிஜமாகிவிடும் என்பதை உணர்த்துகிறது. 5. அன்பின் பரிசு தனது தாய்க்கு வைரத் தோடுகள் வாங்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை எழுத்தாளர் ஷிகா பிரதிலிபியிலிருந்து பெற்ற வருமானம் மூலம் நிறைவேற்றினார். இந்தத் தருணம் அவர்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது, படைப்பாற்றல் எவ்வாறு அர்த்தமுள்ள பரிசுகளுக்கு வழிவகுக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. 6. போராட்டத்திலிருந்து வெற்றிக்கு. கோவிட் காலத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு, நிதி சிக்கல்கள் உட்பட ஏராளமான சவால்களை ஸ்ரீ எதிர்கொண்டார். அப்போது பிரதிலிபியிலிருந்து எதிர்பாராத விதமாய் அவருக்குக் கிடைத்த முதல் சம்பாத்தியம் அவருக்கு பெரும் உதவியாய் அமைந்தது. இருண்ட காலங்களில் ஒளியைக் கண்டடைவதற்கும், துன்பங்களைச் சமாளிப்பதற்கும் படைப்பாற்றல் துணை நிற்கும் என்பதற்கு ஸ்ரீயின் அனுபவம் ஒரு சான்று. 7. சொற்களின் வழியே உருவாகும் மாற்றம். மயூரி தனது எழுத்தைப் பயன்படுத்தி சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். மேலும் அவர் தனது பிரதிலிபி சம்பாத்தியத்தை உதவி தேவைப்படுபவர்களுக்காக பயன்படுத்துகிறார். அவரது அர்ப்பணிப்பு, கதைசொல்லல் எவ்வாறு சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க உதவும் என்பதை விளக்குகிறது.மேலும் பார்க்க
- சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 7 போட்டி முடிவுகள்22 ஜூலை 2024பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 7 போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எழுத்தாளர்கள் போட்டியில் பங்கேற்று சிறந்த காதல் கதைகள், விறுவிறுப்பான த்ரில்லர் கதைகள், திகில் மற்றும் மர்மக் கதைகள், சமூக கருத்துக்கள் கொண்ட பெண்மைய கதைகள் என பல வகைகளில் கதைகள் எழுதியிருந்தார்கள். போட்டிக்கு வந்த அனைத்து கதைகளுமே சுவாரஸ்யமானவை மற்றும் தனித்துவமானவை. போட்டியில் கலந்துகொண்டு 60+ பாகம் கொண்ட கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள்! பெரும் போட்டிக்கு மத்தியில் வாசகர் தேர்வு மற்றும் நடுவர் தேர்வு ஆகியவற்றில் தேர்வாகி வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! குறிப்பு: கீழே குறிப்பிட்டுள்ள வாசகர் தேர்வு வெற்றியாளர்கள், நடுவர் தேர்வு வெற்றியாளர்கள் மற்றும் 77 பாகம் எழுதிய எழுத்தாளர்கள் அனைவரும் பிரதிலிபியின் [email protected]எனும் ஈமெயிலில் இருந்து இன்றே மின்னஞ்சல் பெறுவார்கள். அதனை நிரப்பி பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளவும். - போட்டி வெற்றியாளர்கள் - சிறந்த 7 வாசகர் தேர்வு தொடர்கள் போட்டியின் எல்லா விதிகளையும் (ஆரம்ப தேதி, முடிவு தேதி, ஒவ்வொரு பாகத்திற்குமான வார்த்தை எண்ணிக்கை முதலியன) பின்பற்றி சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகளில் இருந்தும் கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் முதல் 7 கதைகள் தேர்வு செய்திருக்கிறோம் : - எழுத்தாளரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் போட்டிக் கதையின் மொத்த வாசிப்பு எண்ணிக்கை. (வாசகர் எண்ணிக்கை/பாலோவர்ஸ்) - அதிக வாசிப்பு மதிப்பெண் (Highest Engagement Score), அதாவது எத்தனை சதவீத வாசகர்கள் கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுதாக வாசித்து முடித்துள்ளனர் என்ற அடிப்படையில் கணினித்தரவுகள் வழங்கும் மதிப்பீடு. --தகிக்கிறாள் தளிர்நிலா! - ராணி தென்றல் (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) --💘💘மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா??💘💘 - Nivi Ammu தமிழின் காதலி (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) --இனியாவின் இறுதி நிமிடங்கள் - Nithya Mariappan 🖋️📖 (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) --💙 என் முதலோடு முடிவானாய் - 🖊️மேக வாணி💖 Megavani (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) --வா வா என் இதயமே... - Mithila Mahadev (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) --அழகு அசுரனும்! அன்பு அன்றிலும்! - K Divyashobana (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) --நான் காதலிக்கும் போதிமரமே (முழுத்தொகுப்பு) - கனவு காதலி ருத்திதா (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 7 தொடர்கள் (ரேங்க் முறைமை இல்லை): தேர்வு செய்த அடிப்படை : தொடர் கதைகளை மதிப்பிடும் போது நடுவர்களால் பல முக்கிய காரணிகள் பரிசீலிக்கப்பட்டன. கதையின் தீம், எழுதும் நடை, கதைக்களம், கதையின் அமைப்பு, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நாவலின் போது கதாபாத்திரங்களின் வளர்ச்சி, உரையாடலின் முக்கியத்துவம், வாசிப்பில் ஆர்வத்தைத் தக்கவைக்க பொதுவான இலக்கணம், எழுத்துப்பிழைகள் மற்றும் பல விஷயங்கள். வாசகர் தேர்வுக்கான பத்து தொடர்களை நீக்கியபின், இந்தக் காரணிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளித்து கீழே உள்ள சிறந்த 7 தொடர்கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறோம்: --உயிரே.... உன் உயிரென நான் இருப்பேன்...💜💜 - சக்தி பிரியா மிரா 💜 (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) --வஞ்சித் தேவன் - சித்ரவதனா (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) --அசுரனை வென்ற தேவதை💞 - 💕கவி மகிழினி 💕 நாவல்ஸ் (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) --"பாவா பர்ணபாஸ்" - விஜய் தமிழ் பேய்க்கதை பிரின்ஸ் (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) --ஹார்ட் பத்திரம்..! - கவிஞர் ஜார்ஜ் வாஷிங்டன் (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) --அணைத்திடவா அகமலரே - கயல்விழியாழ் 🔥 (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) --திங்கள் வலித்த கால்அன்னோன் - Gowtham Shiva (ரூ. 3000 ரொக்கப்பரிசு + பிரதிலிபியின் பிரத்யேகமான சட்டமிடப்பட்ட வெற்றிச்சான்றிதழ்) உத்தரவாதமான பரிசு - 77 பாகங்கள் சவால் போட்டியில் பங்கேற்று 77 பாகங்கள் எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்! விழிகளால் கைது செய் - Rekha Sathish நெருங்காதே பெண்ணே... நெஞ்செல்லாம் நஞ்சாகும் - ஹே ராம் தழல்🔥 மன்னவனே உன் மாலை சேரவா - காஞ்சனா அன்புச்செல்வம் ❤️🔥❤️🔥அசுரனின் மனதை வதைக்கும் மலர்கொடியாள் ❤️🔥❤️🔥 1 - L Leelavathi போடா 😉 போடி - ராதேகிருஷ்னா அவனதிகாரம் - R J Dream catcher 💫 திங்கள் வலித்த கால்அன்னோன் - Gowtham Shiva இனியாவின் இறுதி நிமிடங்கள் (முழு நாவல்) - Nithya Mariappan 🖋️📖 ஹார்ட் பத்திரம்..! - கவிஞர் ஜார்ஜ் வாஷிங்டன் வா வா என் இதயமே... - Mithila Mahadev இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய் (தேடாத உறவும், பந்தமும் நீ தானடா (டி)) 💝💝 - 💘Love Amore💘 🔥செஞ்சுடர் தாங்(க்)கிடுமோ🔥(முடிந்தது) - நந்தினி ராஜ்குமார் 🤩 இவள் நதி 🤩 இலக்கணப் பிழை - ரமா பாலாஜி மனம் படைத்தேன் உன்னை மணப்பதற்கு - Mari Mathi இருவரும் அறியா மணமேடை - கனவுகளின் தோழி தோழி யாதவனின் வேய்ங்குழல் - ஆதுரியாழ் ❤️ 🖋 🎶 என்னுள் நிறைந்த நிலவே - Satha 💛 விழிகள் அவளாக மொழிகள் நானாக - கேதாரநாதன் சரவணன் வளவன் 🌸பூவினுள் ஓர் புயல் 🌊 - 💞 ருக்மினி கண்ணனின் காதலி 💞 கலாபக் காதலா🥀 - ஸ்ரீ காதலின் காதலி உயிர் பாதி உ(எ)னதே - Satha 💛 ஏற்றுக்கொள்வாயா கண்மணி?? - சீமா தகிக்கிறாள் தளிர்நிலா! - ராணி தென்றல் அழகிய தமிழ்மகன்.. - பிருந்தா சாந்தகுமார் Saksi உயிரில் கலந்த உறவே - Murugesan Nallathambi மின்மினி தேசம் - Laxmi Devi நீயின்றி நானேதடி? - பிறை நிலா ருத்வி வஞ்சித் தேவன் - சித்ரவதனா வழி துணையாய் நான் வரவா! - Karpagam Alagappan அன்பில் அடை மழைக்காலம்!! - G அழகு லட்சுமி 💞 Feeling Killer Princess 💞 1- மீண்டும் ஒரு முறை காதல்..!💞💞 - ✒️இலட்சுமிமாதவி𝓛𝓪𝓴𝓼𝓱𝓶𝓲𝓶𝓪𝓭𝓱𝓪𝓿𝓲 குறை ஒன்றும் இல்லை - ஆபுத்திரன் உறவுக்கு ஏங்கும் ஏந்திழையாள் - Ruba Vahini எதார்த்த கதையரசி என் தீரா போதை நீயடி ❤️🔥 - Nithi Riya 💘💘மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா??💘💘 - Nivi Ammu தமிழின் காதலி மீண்டு(ம்) வந்த சிலையே! - அஞ்சனா சுபி அஞ்சனா சுபி விழிதனில் எனை ஆட்கொண்டவளே - தமிழ் காதலி தனிமையின் காதலி அசுரனை வென்ற தேவதை💞 - 💕கவி மகிழினி 💕 நாவல்ஸ் கருப்பின் வம்சம் - Uma Saravanan 🤰🕸️மாயவலை🕸️🤰 - நிஷா நாயகன் Amani than ரணம் அறிவாயோ!!!! என்னவனே(ளே)........ - Swetha கிழட்டுநரியும் பட்டுகிளியும்! - கவிதா ராமதாஸ் Nirmala பெண்களால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் - Val Ro மருமகள் - வட மலை சாமி லோக நாதன் Lokanathan பிற குறிப்பிடத்தக்க படைப்புகள் கீழே உள்ள கதைகளை குறிப்பிடாமல் விட்டால் அது நியாயமற்றது. மேலே இடம்பிடித்திருக்கும் கதைகளுக்கு சவாலான போட்டியாக இறுதி வரை இருந்த குறிப்பிடத்தக்க படைப்புகள் இவை. நிச்சயமாக அடுத்த போட்டியில் பரிசுபட்டியலில் இவர்கள் இடம்பெறுவார்கள் என நம்புகிறோம். குறை ஒன்றும் இல்லை - ஆபுத்திரன் கடந்தவை கனவாகட்டும்-1 - வேலையா கார்த்திகேயன் விழிகளால் கைது செய் (அத்தியாயம் -1) - Rekha Sathish காதலாக நீ தேடலாக நான் - Vanmathy Hari ஜகம் நீ🔥 அகம் நீ❤️ - யாத்ரா கிருஷ்ணன் நான் காதலிக்கும் போதிமரமே (முழுத்தொகுப்பு) - கனவு காதலி ருத்திதா கிழட்டுநரியும் பட்டுகிளியும்! - கவிதா ராமதாஸ் Nirmala முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே ❤️ - Nivetha 6797 விழிதனில் எனை ஆட்கொண்டவளே... (முடிவுற்றது) - தமிழ் காதலி தனிமையின் காதலி ❤️🔥❤️🔥அசுரனின் மனதை வதைக்கும் மலர்கொடியாள் ❤️🔥❤️🔥 1 - L Leelavathi குறிப்பு: அனைத்து மின்சான்றிதழ் மற்றும் இராஜபத்திர பட்டய சான்றிதழ் எழுத்தாளர்களுக்கு [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும். அதேபோல் பங்குபெற்ற அனைத்து தொடர்களும் முகப்பு பக்க பேனரில் ஒரு வாரத்திற்குள் பட்டியலிடப்படும். வெற்றியாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! அடுத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டிகளில் பங்கேற்கவும்.சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 8 போட்டியில் பங்கேற்க -https://tamil.pratilipi.com/event/pme6ht3f1h பிரதிலிபி படைப்பாளிகள் திட்டம் 2-இன் எழுத்து சவாலில் பங்கேற்க -https://tamil.pratilipi.com/event/3tfg269301 பிரதிலிபி போட்டிக்குழுமேலும் பார்க்க
- வெற்றி பெறத்தக்க தொடரை எழுதுங்கள்: சிறந்த எழுத்தாளர் விருதுகள் போட்டிக்கான உதவிக்குறிப்புகள்!24 மே 2024எழுத்தாளருக்கு வணக்கம்! சிறந்த எழுத்தாளர் விருதுகள் போட்டிக்கு தொடக்கத்திலிருந்தே வாசகர்களை கவர்ந்திழுக்கும் வெற்றித் தொடரை எழுத நீங்கள் தயாரா? பிரதிலிபி படைப்பாளிகள் திட்டத்தின் அனைத்து பயிற்சி வகுப்புகளையும் தலைப்புவாரியாக கீழே கொடுத்திருக்கிறோம். பார்த்து பயனடையுங்கள் கதைக்கரு கதாபாத்திரங்கள்: (1) ஒரு நெடுந்தொடருக்கு கதைக்கருவை எவ்வாறு வளர்ப்பது? (2) கதாபாத்திரங்களையும் , துணைக்கதைகளையும் எவ்வாறு உருவாக்குவது? கதையின் பிரிவு அடிப்படையில்: (1) காதல் பிரிவில் ஒரு சுவாரஸ்யமான தொடரை உருவாக்குவது எப்படி? (2) குடும்ப நாடகம், சமூகம் மற்றும் பெண்கள் கருப்பொருள்களில் சுவாரஸ்யமான தொடரை எழுதுவது எப்படி? (3) மர்மம், பேண்டஸி மற்றும் திகில் கருப்பொருள்களுடன் சுவாரஸ்யமான தொடரை எழுதுவது எப்படி? (4) ஒரு சுவாரஸ்யமான திரில்லர் தொடரை எழுதுவது எப்படி? எழுதும் நுட்பங்கள் : (1) கதையின் கோணம், நிகழ்வுகள், அவற்றின் வரிசை மற்றும் கதைக்கருவில் வரக்கூடிய சாத்தியமான ஓட்டைகளைப் புரிந்துகொள்வது (2) அத்தியாயங்கள் பிரிப்பது மற்றும் காட்சிகளை எழுதுவது எப்படி? (3) உரையாடல் எழுதும் நுட்பம் மற்றும் முதல் அத்தியாயத்தை எவ்வாறு வடிவமைக்கலாம். (4) கதையில் வாசகரை இணைக்கும் கொக்கி மற்றும் கதைத் திருப்பம்: அவற்றை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது மற்றும் இறுதியில் மறக்கமுடியாத தொடரை உருவாக்குவது எப்படி? (5) வெவ்வேறு உணர்வுகளை எழுதுவது எப்படி? திட்டமிடல் மற்றும் சவால்களை சமாளித்தல்: (1) எழுதுவதற்கான அட்டவணையை எவ்வாறு உருவாக்குவது? (2) எழுதும் போது ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் மற்றும் அவற்றின் தீர்வுகள் (தடைகள்/மன அழுத்தம்/நேரம்) பிரதிலிபியில் நீண்ட தொடர் எழுதுவதன் நன்மைகள்: (1) ஏன் பிரதிலிபி நீண்ட தொடர்களை ஊக்குவிக்கிறது? (2) பிரபல தொடர்களை ஆராய்தல் (3) வாசகர்களை ஈர்த்தல் (விளம்பரப்படுத்துதல்) (4) பிரதிலிபி பரிந்துரை அமைப்பை புரிந்துகொள்ளுதல் (5) ப்ரீமியம் தொடர்கள் மூலம் மாதாந்திர ராயல்டி தொகை (6) சீசன் எழுதுதல் (7) நீண்ட தொடர்களின் பயன்கள். எங்களது பயிற்சி வகுப்புகளின் காணொளி தொகுப்பு 1. எங்களது பயிற்சி வகுப்புகளின் காணொளி தொகுப்பு 2. இன்றே உங்கள் தொடரைத் திட்டமிடத் தொடங்குங்கள்! இந்த அம்சங்களைத் திட்டமிடுவதற்கு சுமார் 4 முதல் 5 நாட்கள் ஆகும் (ஒவ்வொரு நாளும் ஒரு குறுகிய நேரத்தை ஒதுக்கும் பட்சத்தில் ), ஆனால் இந்த முதலீடு கணிசமான பலனைத் தரும். பிரதிலிபி சூப்பர் ரைட்டர் விருதுகளில் அங்கீகாரம் பெறுவதோடு, தொடர்ந்து சரளமாக எழுதுவதற்கும், எழுத்துத் தடையைத் தவிர்ப்பதற்கும் நீங்கள் இதன் மூலம் தயார் ஆவீர்கள். இங்கே க்ளிக் செய்து இந்தியாவின் மிகப்பெரிய போட்டியான சிறந்த எழுத்தாளர் விருதுகள் போட்டியின் பங்கேருங்கள் | சீசன் 8 உங்கள் கதைக்களம் அல்லது கதாபாத்திர வளர்ச்சி தொடர்பான கேள்விகளை நீங்கள் ஜெமினியிடம் கேட்கலாம். ஜெமினி உங்கள் உள்ளீட்டை ஆராய்ந்து, ஆலோசனைகள், யோசனைகள் மற்றும் அடுத்து செல்லவேண்டிய திசைகளை வழங்கும். வெவ்வேறு AI தளங்களை நீங்களே ஆராய்ந்து பார்க்கலாம். உங்களது கற்பனைத் திறனோடு இதுபோன்ற தளங்களை கொண்டு அதனை மெருகேற்றுவதே சிறந்த அணுகுமுறையாகும். இதில் உங்கள் கற்பனைத்திறமை மிக மிக முக்கியம். அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்! பிரதிலிபி போட்டிகள் குழுமேலும் பார்க்க
- சிறந்த எழுத்தாளர் விருதுகள் | சீசன் 9 | அதிகம் கேட்கப்படும் கேள்விகள்09 மே 2024சிறந்த எழுத்தாளர் விருதுகள் | சீசன் 9 | அதிகம் கேட்கப்படும் கேள்விகள் 1. இந்த போட்டியில் யார் பங்கேற்கலாம்? சிறந்த எழுத்தாளர் விருதுகள் போட்டியில் இப்போது அனைத்து எழுத்தாளர்களும் பங்கேற்கலாம். உங்களிடம் கோல்டன் பேட்ஜ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்கேற்க முடியும்! 2. டிரைலர், முன்னுரை, குறிப்புகள் போன்றவற்றை ஒரு பாகமாக பதிப்பித்து கதையை தொடங்குவதை நான் ஏன் தவிர்க்க வேண்டும்? டிரைலர், முன்னுரை, குறிப்புகள் போன்றவற்றை ஏன் தவிர்க்கவேண்டும் என்பதற்கான காரணங்கள்: (1) வாசகர் ஈடுபாடு: பாகம் 1-இலிருந்து கதை உடனடியாக தொடங்கவேண்டும் என்பதையே வாசகர்கள் விரும்புவார்கள். அதுதவிர பிற செய்திகளை கதையின் தொடக்கத்தில் கொடுத்தால் கதையை தொடர்ந்து வாசிக்கும் விருப்பம் குறைந்துவிடும். (2) அறிவுரை: தேவைப்பட்டால் 4-5 வரிகளுக்கு மிகாமல் அறிமுகம் அல்லது டிரைலர் ஆகியவற்றுடன் முதல் பாகத்தை தொடங்கலாம். அதன்பின் நேரடியாக முதல் காட்சியை தொடங்கிவிடவேண்டும். 3. போட்டிக்கு தகுதிபெற என்னுடைய தொடரை பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனில் நான் எப்படி சேர்ப்பது? ஒரு கோல்டன் பேட்ஜ் எழுத்தாளராக உங்களது புதிய தொடரின் முதல் 15 பாகங்கள் வாசகர்களுக்கு இலவசமாக வாசிக்க கிடைக்கும். நீங்கள் 16ஆவது பாகம் பதிப்பிக்கும், தானாகவே உங்களது தொடர் பிரதிலிபி பிரீமியத்தின்கீழ் வந்துவிடும். அப்போதிலிருந்து நீங்கள் வருமானம் பெறுவதற்கான வழி திறந்துவிடும். 4. என்னிடம் இப்போது கோல்டன் பேட்ஜ் இல்லை. நான் என்ன செய்வது? கோல்டன் பேட்ஜ் இல்லையெனினும் நீங்கள் போட்டியில் பங்கேற்க முடியும். இடையில் கோல்டன் பேட்ஜ் கிடைத்தாலும், புதிய பாகங்கள் பதிப்பிக்கும்போது உங்களது தொடர் தானாகவே பிரதிலிபி பிரீமியத்தின்கீழ் வந்துவிடும். மேலதிகமாக, கோல்டன் பேட்ஜ் கிடைத்தபின் 16+ பாகங்கள் உள்ள உங்கள் எந்த தொடரையும் ப்ரீமியத்தின் கீழ் மாற்றிக்கொள்ள முடியும்: Step 1: பிரதிலிபி செயலியை திறந்து, பேனா ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட தொடரை திறக்கவும். Step 2: பின் "தொடர் விவரங்களை திருத்த" பொத்தானை க்ளிக் செய்து, சப்ஸ்கிரிப்க்ஷனில் உங்கள் தொடரை சேர்க்கும் ஆப்ஷனை தேர்தெடுக்கவும். Step 3: சப்ஸ்கிரிப்ஷனில் சேர்க்கும் ஆப்ஷனிற்கு ஆம் என தேர்ந்தெடுக்கவும். பின் 24 மணி நேரத்திற்குள் உங்களது தொடர் ப்ரீமியத்தில் சேர்ந்துவிடும். 5. பிரதிலிபியில் நான் எப்படி கோல்டன் பேட்ஜ் பெறுவது? நீங்கள் பிரதிலிபியில் கோல்டன் பேட்ஜ் எழுத்தாளராக கீழே கொடுத்திருக்கும் இரண்டும் பூர்த்தியாக வேண்டும். அவை பூர்த்தியானபின்பு, உங்களது ப்ரோபைலில்கோல்டன் பேட்ஜ் தெரியும் - 1. உங்களுக்கு குறைந்தபட்சம் 200 ஃபாலோவர்ஸ் இருக்கவேண்டும். 2. நீங்கள் கடைசி 30 நாட்களில் 5 படைப்பேனும் பதிப்பித்திருக்க வேண்டும். 6. எனது தொடர் போட்டியில் சேர்ந்துவிட்டது என்பதை நான் எப்படி தெரிந்துகொள்வது? கீழே உள்ள வழிமுறையை கொண்டு உங்களது தொடர் போட்டியில் சேர்ந்துவிட்டதா இல்லையா என்பதை உறுதி செய்துகொள்ளலாம்: (1) உங்களது தொடரின் பாகங்கள் குறிப்பிட்ட காலவரையரைக்குள் பதிப்பிக்க வேண்டும்: போட்டியின் தொடக்கத்தேதி மற்றும் முடிவு தேதிக்குள் 70 பாகம் கொண்ட தொடர் பதிப்பிப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.. ஒவ்வொரு பாகமும் குறைந்தபட்சம் 1000 வார்த்தைகள் கொண்டிருக்கவேண்டும். (அதிகபட்ச வார்த்தை/பாக வரம்புகள் இல்லை) (2) போட்டிக்கான பிரிவை தேர்ந்தெடுங்கள்: தொடரின் முதல் பாகம் பதிப்பிக்கும்போது சிறந்த எழுத்தாளர் விருது 9 எனும் பிரிவை தேர்ந்தெடுக்கவும். இது போட்டியில் உங்கள் பங்கேற்பை உறுதிசெய்யும். (3) போட்டி விதிகளை பின்பற்றுங்கள்: போட்டி விதிமுறைகளை பார்த்து உங்கள் தொடர் அதனை பின்பற்றி எழுதப்பட்டிருக்கிறதா என சரிபார்க்கவும். 7. போட்டி முடிவுகளை அறிவிக்கும் முறைமை என்ன? போட்டி கடைசித்தேதி முடிந்தபின், எங்களது குழு போட்டியின் காலவரையறைக்குள் எழுதப்பட்ட தொடர்களின் பட்டியலை எடுப்பார்கள். போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டு எழுதப்பட்ட தொடர்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். எங்களது நடுவர் குழு அனைத்து தொடர்களையும் வாசித்து, கதைக்களம், தொடக்கத்திலிருந்து முடிவு வரை கதையின் சுவாரசியம், கதாபாத்திர வடிவமைப்பு, வசன அமைப்பு, கதைதிருப்பங்கள் மற்றும் பலவற்றை கருத்தில் கொண்டு வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். 8. 100 பாக சாம்பியன்களில் இருந்து எப்படி வாசகர் தேர்வாக முதல் 20 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்? போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறைந்தபட்சம் 100 பாகங்கள் கொண்டு எழுதப்படும் அனைத்து தொடர்களும் இதற்கு தகுதி பெறும். வாசகர் எண்ணிக்கை, வாசகர் ஈடுபாடு மற்றும் படைப்பை வாசிக்க தொடங்கிய வாசகர்களில் எத்தனை பேர் படைப்பை வாசித்து முடிக்கிறார்கள் (Completion Rate metrics) ஆகியவற்றின் அடிப்படையில் வாசகர் தேர்வாக முதல் 20 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். 9. இந்த போட்டியில் எனது ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட தொடரின் இரண்டாவது சீசனை எழுதலாமா? எழுதலாம். ஆனால் இரண்டாவது சீசன் தன்னளவில் முழுமையான கதைக்களத்தை கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்போதே வாசித்து முடிவுகளை அறிவிக்க ஏதுவாக இருக்கும். அப்படி இல்லாமல், உங்கள் கதை / கதையின் திருப்பங்கள் முதல் சீசனை ஒட்டி எழுதப்பட்டால் நடுவருக்கு அதனை மதிப்பிட சிரமமாக இருக்கும். அதன் காரணமாக நீங்கள் மதிப்பெண்களை இழக்கலாம்! 10. என்னுடைய ஒரே தொடரை இரண்டு வேறு போட்டிகளுக்கு சமர்ப்பிக்கலாமா? இல்லை. ஒரு தொடர் ஒரு போட்டிக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். 11. போட்டி முடிவுகளை எங்கே பார்ப்பது? ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் வலைப்பதிவு பகுதியில் இந்த போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். Step 1: பிரதிலிபி செயலியை திறந்து, பேனா ஐகானை கிளிக் செய்யவும். Step 2: பின் கடைசிவரை ஸ்க்ரால் செய்யவும். அங்கே வலைப்பதிவுகள் பகுதியை கிளிக் செய்யவும். அதில் போட்டி முடிவுகளை பார்க்க இயலும். -------------------------------------------------------------------------------------------------- சூப்பர் எழுத்தாளராக மாறுவதற்கு உதவி வேண்டுமா? =தொடர்கதை எப்படி பதிப்பிப்பது என்பதை இந்த வீடியோ வழிகாட்டி மூலம் தெரிந்து கொள்ள. [இங்கே சொடுக்கவும்] =டிரெண்டிங் தீம் மற்றும் எழுதுவதற்கான குறிப்புகளை வாசித்து பயன்பெறுங்கள்! [இங்கே சொடுக்கவும்] இந்தப் போட்டி தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு,[email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் நேரடியாக எங்களுக்கு எழுதலாம். எங்கள் குழு ஒவ்வொரு கேள்விக்கும் 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க முயற்சிக்கும். ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் ஏற்கனவே நம் தளத்தில் வெற்றியைக் கண்டுள்ளனர், தங்கள் திறமையை வசீகரிக்கும் கதைகளாக மாற்றி, ராயல்டிகளைப் பெற்றுள்ளனர். அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு இதோ! இதில் பங்குபெற்று, சம்பாதிக்கும் எழுத்தாளராகவேண்டும் என்ற உங்கள் கனவுகளுக்கு சிறகு கொடுங்கள்! அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்! பிரதிலிபி போட்டிகள் குழுமேலும் பார்க்க
- திறமையான வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது12 ஏப்ரல் 2024அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு சிறப்பான செய்தி எங்களிடம் உள்ளது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருதுகள் -6 இன் போட்டி முடிவுகள் சிலநாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. தங்கள் பிரதிலிபி ப்ரொபைலில் முதல் முறையாக 60 பாகங்கள் கதையை பதிவிடும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் சிறப்பு கௌரவம் அளிக்கப்படும் என அறிவித்திருந்தோம். முதல்முறையாக ஒருவர் 60 பாகங்கள் கொண்ட தொடரை எழுதுவதற்கு கணிசமான நேரம், பொறுமை, திறமை, ஒழுக்கம் மற்றும் எழுத்து திறமை தேவை என்பதால் இது மிகவும் கடினமான சவாலாகவே இருந்தது. எழுத்தின் மீது மிகுந்த அன்பு இல்லாமல், இதைச் செய்வது எளிதல்ல. எங்களின் வியப்பை வெளிப்படுத்தவோ, எழுத்தாளர்களைப் பாராட்டவோ எங்களிடம் வார்த்தைகள் இல்லை. நமது தளத்தில் இத்தகைய திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறோம். இத்தகைய அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடின உழைப்பால் எழுத்தாளர்களுக்கு இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, பெரிதாகச் செய்ய முடியும் என்று நம்புகிறோம். உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் எழுத்தார்வம் எங்களை ஊக்கப்படுத்தியது மற்றும் இது மற்ற எழுத்தாளர்களையும் எழுதுவதற்கு ஊக்குவிக்கும். எனவே, உங்களின் இந்த சிறப்பான சாதனையை பிரதிலிபி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாடுவோம்! நாங்கள் உறுதியளித்தபடி, 60 பாகங்கள் கொண்ட கதையை முதல்முறையாக எழுதிய எல்லா எழுத்தாளர்களின் நேர்காணலும் பிரதிலிபி பக்கத்தில் விரைவில் பதிப்பிக்கப்படும். இப்போட்டியில் முதல்முறையாக 60 மற்றும் அதற்கும் மேற்பட்ட பாகங்களைக் கொண்ட தொடரை பதிவிட்ட அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல்- படைப்பின் பெயர் எழுத்தாளர் பெயர் காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்) Raji Anbu அழகிய அசுரா! ஸ்ரீ இதயத்தை திருடாதே சுபஸ்ரீ பூமிநாதன் சந்திர மாகாளி சண்முகா சேதுராமச்சந்திரன் மௌன ராகம் Pandi Selvi ஊருக்கு நாறும் தாழம்பூ ராணி பாலகிருஷ்ணன் இழந்த காதல் மீண்டும் மலர்ந்து ZN Story என் அன்புக் கீரவாணி! ப்ரியமுடன் விஜய் பொகுட்டெழினி இராஜசேகரன் நவநீதம் சின்னத் தாயவள் தியா தேவி என் கண்ணில் பாவை அன்றோ Susee Solaimalai ஆற்றோர நாணல்கள் Yasmine Begam Thooyavan நல்லதொரு வீணை செய்தே!!! Nanthini Vaishnavi சாதிப்பேன் மனோகரன் அழகுசோமசுந்தரம் கொலைதேடும் இரவுகள் Adithiya Magendran உயிர்வரை உந்தன் மடியிலே ஜெனி மோதும் மோகனங்கள் ஜெநிஷா தீன் கதிரவனுள் உறைந்திட வாராயோ வென்பனியே Subha Kartheesan BL நிலவில் மறைந்த சூரியன் தனலட்சுமி ஞானசேகரன்மேலும் பார்க்க
- 80 பாகங்கள் எழுதும் மைல்கல்லை எட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!01 ஏப்ரல் 2024அன்புள்ள எழுத்தாளர்களுக்கு, உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு சிறப்பான செய்தி எங்களிடம் உள்ளது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருதுகள் -6 இன் போட்டி முடிவுகள் சிலநாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. 80 அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்கள் கொண்ட தொடரை எழுதும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிரதிலிபியிலிருந்து உத்தரவாதமான பரிசுகளை அறிவித்திருந்தோம். ஒருவர் 80 பாகங்கள் கொண்ட தொடரை எழுதுவதற்கு கணிசமான நேரம், பொறுமை, திறமை, ஒழுக்கம் மற்றும் எழுத்து திறமை தேவை என்பதால் இது மிகவும் கடினமான சவாலாகவே இருந்தது. எழுத்தின் மீது மிகுந்த அன்பு இல்லாமல், இதைச் செய்வது எளிதல்ல. வெளிப்படையாகச் சொன்னால், எழுத்தளார்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். இந்த எழுத்துப் போட்டியில் பல எழுத்தாளர்கள் சவாலை ஏற்று 80 பாகத் தொடர்களை பதிவிட்டிருந்தனர்! அவர்களில் சிலர் 150/200/250 அல்லது அதற்கும் அதிகமான பாகங்களுடன் கதைகளை எழுதி இருந்தனர். எங்களின் வியப்பை வெளிப்படுத்தவோ, எழுத்தாளர்களைப் பாராட்டவோ எங்களிடம் வார்த்தைகள் இல்லை. நமது தளத்தில் இத்தகைய திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறோம். இத்தகைய அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடின உழைப்பால் எழுத்தாளர்களுக்கு இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, பெரிதாகச் செய்ய முடியும் என்று நம்புகிறோம். உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் எழுத்தார்வம் எங்களை ஊக்கப்படுத்தியது மற்றும் இது மற்ற எழுத்தாளர்களையும் எழுதுவதற்கு ஊக்குவிக்கும். எனவே, உங்களின் இந்த சிறப்பான சாதனையை பிரதிலிபி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாடுவோம்! நாங்கள் உறுதியளித்தபடி, 80 பாகங்கள் கொண்ட கதையை எழுதி நிறைவு செய்யும் எல்லா எழுத்தாளர்களுக்கும் பிரதிலிபியின் மதிப்புமிக்க ராஜபத்திர பட்டய சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில் 80 மற்றும் அதற்கும் மேற்பட்ட பாகங்களைக் கொண்ட தொடரை பதிவிட்ட அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல்- படைப்பின் பெயர் எழுத்தாளர் பெயர் கூடுவிட்டு கூடு வந்து காரை ஆடலரசன் உன் சர்வமும் சர்வாதிகாரியும் நானே Sona Jeeva மந்திரப் புன்னகை ஆபுத்திரன் என் உயிரோசை நீயடா Rekha Sathish இதயத்தை திருடாதே சுபஸ்ரீ பூமிநாதன் உனக்கென மட்டும் வாழும் இதயமடி...உயிருள்ள வரை நான் உன் அடிமையடி... ஹேராம் மூன்று முடிச்சி Para Sakthi கிறுக்கியின் கணவரை காணவில்லை Merlin Moni உயிரினில் கலந்து உணர்வானவள் காஞ்சனா அன்புச்செல்வம் முற்றத்து நிலா லதா சுப்ரமணியன் என் தாளத்தில் நீ சேரவா Sangeetha Velu காதல் கிரிக்கெட்டு ராஜி என் சுவாசம் நீயடி Kiruthikha S கண்களால் கைது செய்யும் அரக்கனே தனிமை காதலி புயலைத் தாலாட்டும் தென்றலவன் விஜயராணி நடராஜன் மனம் கொய்த மாயவன் Laxmi Devi வழி மாறிய மலர்கள் ஒளிநிலா சந்திர மாகாளி சண்முகா சேதுராமச்சந்திரன் காதல் ஆசை யாரை விட்டதோ! Rosline Begam மயிலாய் வருடும் மகாலட்சுமியே...!! Kani Suresh ரா ர' (ராம ரகசியம்) விஜய் தமிழ் உயிரின் மூச்சாகி வா Satha உள்ளத்தை அள்ளித் தந்தேன் Tamil Selvi காத்திருப்பேன் மன்னவா Meera Jo காட்டுமாறன் ஜமீன் மர்மம் Artista மனோ நேச மழையே! செவ்வந்தி துரை என் உயிரில் கலந்த மாயாவி நீயடி(டா) Love Amore அரக்கனை அடக்கிய அக்னி தாரகை Swetha எனக்கு மட்டும் பிழையா Nivetha 6797 சொந்தம் சொல்லி தர வந்தவளே Mithila Mahadev மதுராபுரம் நாக நந்தினி நல்லதொரு வீணை செய்தே!!! Nanthini Vaishnavi காணாமல் போன கனவுகள் அன்பழகன்ஜி பூவும்.. புயலும்.. பிருந்தா சாந்தகுமார் தேனு(னூ)றும் இதழே!! Lakshmitha நிழலன் Rhea moorthy ரியா மூர்த்தி காதலன் குழந்தைதான் காதலி Kousalya Venkatesan தீராது அவன் இரு காதல்..! G அழகு லட்சுமிமேலும் பார்க்க